அனுராதபுரம் நான்கு நாட்டார் கல்வெட்டு

அனுராதபுரம் நான்கு நாட்டார் கல்வெட்டு என்பது இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் சிறப்புவாய்ந்த ஒன்று. உண்மையில் இது தமிழ், சமசுக்கிருதம் ஆகிய இரு மொழிகளில் வெட்டப்பட்டுள்ள ஒரு இருமொழிக் கல்வெட்டாகும். தமிழ்ப் பகுதி தமிழ் எழுத்துக்களிலும், சமசுக்கிருதப்பகுதி கிரந்த எழுத்துமுறையிலும் உள்ளன.[1] தமிழ்ப் பகுதியிலும் சில சமசுக்கிருதச் சொற்கள் கிரந்த எழுத்துக்களில் உள்ளன. 29 வரிகளைக்கொண்ட இந்தக் கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துவிட்டமையால், இதை முழுமையாக வாசித்து அறிய முடியவில்லை. அனுராதபுரத்தில் இருந்தக் கட்டிட அழிபாடுகளிடையே காணப்பட்ட இது இப்போது அனுராதபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது.[2]

நான்கு நாட்டார் எனப்படும் தமிழ் வணிகக் குழுவினரால் வெட்டுவிக்கப்பட்ட இக்கல்வெட்டு, மாக்கோதைப் பள்ளி எனப்பட்ட பௌத்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட அறக்கொடை பற்றிய விபரங்களைத் தருகிறது. ஆனாலும், எழுத்துக்கள் ஆங்காங்கே சிதைந்து இருப்பதால், இந்த அறக்கொடை பற்றிய முழு விபரங்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. பத்மநாதன், சி., 2006. பக் 43.
  2. பத்மநாதன், சி., 2006. பக் 42.

உசாத்துணைகள்

தொகு
  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.

இவற்றையும் பார்க்கவும்

தொகு