அனைத்துலகப் பண்பாட்டு நல்லிணக்க ஆண்டு

2010 ஆம் ஆண்டை அனைத்துலகப் பண்பாட்டு நல்லிணக்க ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. யுனெசுக்கோவுக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படி இந்த ஆண்டு, அனைத்துலக அமைதிப் பண்பாட்டுக்கும், உலகச் சிறுவருக்கான வன்முறை இன்மைக்குமான பத்தாண்டின் நிறைவாகவும், புதிய உத்தியின் தொடக்கமாகவும் அமைகின்றது[1]. மாறிவரும் அனைத்துலகச் சூழலில், தனது 2008 - 2013 ஆண்டுக் காலப்பகுதிக்கான உத்தியின் நோக்கங்களில் முதன்மையானதாக உள்ள இந்தக் கருப்பொருள் குறித்து, யுனெசுக்கோ கூடிய முக்கியத்துவம் அளித்தது.

நோக்கம்

தொகு

மனித குலத்தின் தொடக்க காலத்திலிருந்தே இருந்துவரும் பண்பாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்கள், அவற்றுக்கு இடையில் உருவாக்கப்படும் பிணைப்புக்கள் என்பவற்றின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், பண்பாட்டுப் பல்வகைமையின் பயன்களை மக்கள் விளங்கிக்கொள்ளச் செய்வதே இந்த ஆண்டின் முக்கியமான நோக்கம்[1].

நிகழ்வுகள்

தொகு

ஏறத்தாழ 300 வரையிலான நிகழ்வுகளும், செயற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. உறுப்பு நாடுகளாலும், பல்வேறு பன்னாட்டு, உள்ளூர் அமைப்புக்களாலும், யுனெசுக்கோ செயலகத்தினாலும் இந் நிகழ்வுகளும், செயற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்வாறான நிகழ்வுகளுள் ஆய்வுகள், கூட்டங்கள், பொது விவாதங்கள், கண்காட்சிகள், விழாக்கள் என்பன உள்ளடங்கியிருந்தன. அத்துடன் மக்கள், பண்பாடுகளின் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய முறைசார்ந்தனவும், முறைசாராதனவுமான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைக் கூட்டுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. பண்பாடுகளின் நோக்கில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு ஊடகங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. மரபுவழி அறிவு, உள்ளூர் மக்களின் அறிவு ஆகியவை உட்பட்ட எல்லாவகை அறிவுகளையும் மதித்து ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெற்றன.

குறிப்புக்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு