அனைத்துலக இளைஞர் ஆண்டு (2010-2011)

12 ஆகத்து 2010 ஆம் ஆண்டு தொடங்கும் ஓராண்டுக் காலத்தை அனைத்துலக இளைஞர் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1985 ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட முதலாவது அனைத்துலக இளைஞர் ஆண்டின் 25 ஆவது ஆண்டு நிறைவுடன் பொருந்துமாறு, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி, இதற்கான A/RES/64/134 இலக்கத் தீர்மானத்தை[1] ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியது. இந்த இளைஞர் ஆண்டின் கருப்பொருள் "கலந்துரையாடலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளலும்" என்பதாகும்.

நோக்கம் தொகு

அனைத்துலக இளைஞர் ஆண்டு அறிவிக்கப்பட்டதில் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட விடயங்களாகப் பின்வருவனவற்றை இதுகுறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானம் குறிப்பிடுகிறது[1]:

  • ஐக்கிய நாடுகளின் பட்டயத்தில் பொதிந்துள்ள கொள்கைகளுக்கு அமைதல்.
  • 1965 ஆம் ஆண்டில், அமைதி தொடர்பான விழுமியங்கள், ஒருவரையொருவர் மதித்தல், மக்களிடையே புரிந்துணர்வு என்பன தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டமை.
  • அமைதி தொடர்பான விழுமியங்களை அறிந்துகொள்ளல், மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்தல், முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இளைஞரிடையே பரப்புவதற்கான தேவை.
  • இன்றைய இளைஞர்களின் பிரச்சினைகளும், அவர்களின் ஆற்றலும் கையாளப்படும் விதம் தற்கால சமூக பொருளாதார நிலைமைகள்மீதும், வருங்காலத் தலைமுறையினரின் நலன்கள், வாழ்க்கைநிலை என்பவற்றின் மீது செல்வாக்கைக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தமை.
  • தமது ஆற்றல், ஆர்வம், ஆக்கத்திறன் ஆகியவற்றை சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கும்; ஒவ்வொருவருக்கும் இடையேயான புரிந்துணர்வை வளர்த்தெடுப்பதற்கும் பயன்படுத்துவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கவேண்டும் என நம்புதல்.
  • 1985 ஆம் ஆண்டின் அனைத்துலக இளைஞர் ஆண்டுக் கடைப்பிடிப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்தல்.

செயற்பாடுகள் தொகு

அனைத்துலக இளைஞர் ஆண்டின் நோக்கங்களை அடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், பல்வேறு மட்டங்களிலும் நிகழும் ஒன்றியைந்த செயல்பாடுகளின் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்; உறுப்பு நாடுகளையும், சிறப்பு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் நிதியங்கள், திட்டங்கள் போன்றவற்றையும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

குறிப்புக்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு