அன்கி (மென்பொருள்)

அன்கி (Anki) என்பது ஒரு இலவச மற்றும் திறந்த-மூல மின்னட்டை நிரலாகும். இது மீண்டும் மீண்டும் தோன்றும் வகையில், புலனறிவியல் நுட்பத்தினைப் பயன்படுத்தி விரைவான மற்றும் நீண்டகாலம் மனதில் நிற்கும் வண்ணம் மனப்பாடம் செய்வதற்கான நுட்பமாகும். [5] அன்கி என்பது ( 暗記 ) "மனப்பாடம்" என்பதற்கான சப்பானிய சொல் ஆகும். [6] 1980 களின் பிற்பகுதியில் சூப்பர்மெமோவிற்காக உருவாக்கப்பட்ட SM2 வழிமுறை, நிரலில் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் தோன்றும் வகையிலான மின்னட்டைகளைக் காண்பிக்கும் வகையில் இந்த நிரல் அமைக்கப்பட்டுள்ளது. பயனர்களின் விருப்பத்திற்கும் வேகத்திற்கும் ஏற்ப அட்டைகளில் முன்னுரிமைகளை அனுமதிப்பதற்கும்,மின்னட்டைகளைக் காண்பிப்பதற்கும் அன்கி படிமுறைத் தீர்வு மாற்றியமைக்கப்ப்ட்டுள்ளது. இந்த மின்னட்டைகள் மீயுரைக் குறியிடு மொழியைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன, மேலும் அவை உரை, படங்கள், ஒலிகள், நிகழ்படங்கள், [7] மற்றும் லாடெக்ஸ் சமன்பாடுகளை உள்ளடக்கியிருக்கலாம். அட்டைகளின் தளங்கள், பயனரின் புள்ளிவிவரங்களுடன், திறந்த SQLite வடிவத்தில் சேமிக்கப்படுகின்றன.

அன்கி
உருவாக்குனர்டேமியன் எல்ம்சு
தொடக்க வெளியீடு5 அக்டோபர் 2006; 18 ஆண்டுகள் முன்னர் (2006-10-05)
அண்மை வெளியீடு2.1.38 / 26 திசம்பர் 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-12-26)[1]
Preview வெளியீடு2.1.38beta4 / 23 திசம்பர் 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-12-23)[2]
மொழிபைத்தான் , ரஸ்ட்
இயக்கு முறைமைவிண்டோசு, மேக், லினக்சு, FreeBSD; ஆண்ட்ராய்ட் மற்றும்ஐஓஎஸ் (சிறப்பு பதிப்பு)
கோப்பளவு
  • விண்டோசு: 101 MB
  • மேக்: 136 MB
  • லினக்சு: 148 MB
  • ஆண்ட்ராய்டு: 11.48 MB
  • ஐஓஎஸ்: 25.1 MB
மென்பொருள் வகைமைமின்னட்டை, குறிப்பிட்ட இடைவெளியில்மீண்டும் மீண்டும் தோன்றுதல்
உரிமம்
Desktop: GNU AGPL v3+[3]

Android GNU GPL v3[4]

இணையத்தளம்https://apps.ankiweb.net/

அலைபேசி பதிப்புகள்

தொகு

பின்வரும் திறன்பேசி/ கைக் கணினி மற்றும் வலை பயனர் சேவையர் கணினி பதிப்பிற்கு துணை நிரல்களாக கிடைக்கின்றன: [8] [9] [10]

  • ஐபோன், ஐபாட் டச் அல்லது ஐபாட் (பணம்) க்கான அன்கிமொபைல் [11]
  • அன்கிவெப் [12] (ஆன்லைன் சேவையகம், பயன்படுத்த இலவசம்; துணை நிரல் மற்றும் மேல் வழங்கி ஆகியவை அடங்கும்)
  • ஆண்ட்ராய்டுக்கான அன்கிடிராய்ட் [13] (இலவசமாக, GPLv3 இன் கீழ்; நிக்கோலா ரவுல் எழுதியது)

வரலாறு

தொகு

மென்பொருள் மேம்பாட்டாளர் டேமியன் எல்ம்ஸ் , அன்கி பற்றி அக்டோபர் 5, 2006 இல் குறிப்பிட்டது தான் மிகப் பழமையான குறிப்பாக 2011 இல் அறியப்பட்டது. இதுவே அன்கி மென்பொருள் உருவாக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது. [14]

பதிப்பு 2.0 அக்டோபர் 6, 2012 அன்று வெளியிடப்பட்டது.

பதிப்பு 2.1 6 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிடப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. "Stable Release". Anki. பார்க்கப்பட்ட நாள் 1 Jan 2021.
  2. "Changes". Anki. பார்க்கப்பட்ட நாள் 1 Jan 2021.
  3. "LICENSE". Anki. Damien Elmes. 1 June 2020 – via GitHub.
  4. "COPYING". GitHub. பார்க்கப்பட்ட நாள் 1 June 2020.
  5. Smolen, Paul; Zhang, Yili; Byrne, John H. (25 January 2016). "The right time to learn: mechanisms and optimization of spaced learning". Nature Reviews Neuroscience 17 (2): 77–88. doi:10.1038/nrn.2015.18. பப்மெட்:26806627. Bibcode: 2016arXiv160608370S. 
  6. wikt:暗記
  7. Played in a separate MPlayer window.
  8. "Anki - powerful, intelligent flashcards". ankisrs.net. 29 October 2017. AnkiMobile is a paid companion to the free computer program,
  9. "Anki-Android Wiki: FAQ: Do I need Anki Desktop too?". 29 October 2017. AnkiDroid is designed primarily as a tool for reviewing cards created with Anki Desktop, rather than as a complete replacement for it.
  10. "About - AnkiWeb". 29 October 2017. AnkiWeb is intended to be used in conjunction with the computer version of Anki. While it is possible to create basic text-only cards and review them using only AnkiWeb,
  11. "Anki - powerful, intelligent flashcards". ankisrs.net.
  12. "Anki - friendly, intelligent flashcards". ankiweb.net.
  13. "Anki on Android". github.com. 26 July 2019.
  14. Happy birthday, Anki!, a thread started by Damien Elmes in the ankisrs Google Group on 5 October 2011.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்கி_(மென்பொருள்)&oldid=3484686" இலிருந்து மீள்விக்கப்பட்டது