அன்டர் செயல்முறை

அன்டர் செயல்முறை (Hunter process, ஹண்டர் செயல்முறை) என்பது தொழிற்சாலைகளில் முதன்முதலில் கம்பியாக நீட்டும் தன்மை கொண்ட தூய்மையான உலோக டைட்டானியம் உற்பத்தி செய்யப் பயன்பட்ட செயல்முறையாகும். நியூசிலாந்தைச் சேர்ந்த அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த[1] ஏ. மேத்தியூ அன்டர் 1910 ஆம் ஆண்டில் இதைக் கண்டறிந்தார். இச்செயல்முறையில் டைட்டானியம் நான்மகுளோரைடு (TiCl4) சோடியத்துடன் சேர்க்கப்பட்டு ஒரு இரும்பு கொள்கலனில் 700 முதல் 800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டு ஒடுக்க வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

TiCl4 + 4 Na → 4 NaCl + Ti

இச்செயல்முறைக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட டைட்டானியம் யாவும் தூய்மையற்ற நிலையில் டைட்டானியம் நைட்ரைடு கலந்தே இருந்தன. 1940 ஆம் ஆண்டில் கிரால் செயல்முறையில் டைட்டானியம் நான்மகுளோரைடு மக்னீசியத்தால் ஒடுக்கப்பட்டு டைட்டானியம் தயாரிக்கப்பட்டது. இம்முறை அன்டர் செயல்முறையைக் காட்டிலும் மிகவும் சிக்கனமானது ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. M. A. Hunter "Metallic Titanium" J. Am. Chem. Soc. 1910, pp 330–336. எஆசு:10.1021/ja01921a006
  2. Heinz Sibum, Volker Günther, Oskar Roidl, Fathi Habashi, Hans Uwe Wolf, "Titanium, Titanium Alloys, and Titanium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:095 10.1002/14356007.a27 095
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டர்_செயல்முறை&oldid=3187800" இலிருந்து மீள்விக்கப்பட்டது