அன்டோயின் ஜெரோம் பாலார்டு
அன்டோயின் ஜெரோம் பாலார்ட் (Antoine Jérôme Balard) (1802-1876) ஒரு பிரெஞ்சு வேதியியலாளரும் புரோமினைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
1870 ஆம் ஆண்டில் பாலார்டு | |
பிறப்பு | மோண்ட்பெல்லியர், பிரான்சு | 30 செப்டம்பர் 1802
---|---|
இறப்பு | 30 ஏப்ரல் 1876 பாரிஸ், பிரான்சு | (அகவை 73)
துறை | வேதியியல் |
அறியப்பட்டது | புரோமின் கண்டுபிடிப்பு |
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் பிரான்சில் மோண்ட்பெல்லியரில் 1802 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் பிறந்தார்.இவர் தனது வாழ்க்கையை ஒரு மருந்து தயாரிப்பாளராகத் தொடங்கினார். தனது சொந்த ஊரில் அறிவியல் ஆசிரியர்களுக்கு வேதியியல் பாடத்திற்கான உதவியாளராக செயல்பட்டுள்ளார். பின்னர் இராயல் மருந்தியல் கல்லூரி மற்றும் பள்ளியில் வேதியியல் பேராசிரியர் பதவியில் பணியாற்றினார். இவர் தெற்கு பிரான்சின் மத்தியதரைக்கடல் அருகே உள்ள மோண்ட்பில்லியர் என்ற இடத்தின் உவர் சதுப்பு நிலத்தில் கிடைத்த கடற்பாசியின் சாம்பலை குளோரின் சூழலில் வைத்து வாலைவடித்தார். கிடைத்த பொருளானது குளோரினுக்கும், அயோடினுக்கும் இடைப்பட்ட பண்புகளைக் கொண்டிருந்தது. அது நிச்சயம் ஒரு புதிய தனிமம் என்பதை உணர்ந்த அவர் இலத்தீன் வார்த்தையில் மூரியா என்ற பெயர் சூட்டினார். இதே தனிமமானது இவருக்கு ஓராண்டு முன்னதாக 1825 ஆம் ஆண்டில் கார்ல் ஜேக்கப் லோவிக் என்பவராலும் கண்டறியப்பட்டது. இவர்களிருவரின் கண்டுபிடிப்புமே புரோமின் என்ற தனிமம் தான். இரண்டு வெவ்வேறு அறிவியலாளர்களுமே புரோமினைக் கண்டுபிடித்தவர்களாக உலகால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆவர்.
புரோமின் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்த சாதனையின் காரணமாக இவருக்கு பாரீசில் லூயி ஜேக்கப் தெனார்டின் பணியிடம் அவருக்குப் பின்னதாக கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. [1] 1851 ஆம் ஆண்டில் இவர் டி பிரான்சு கல்லூரியில் வேதியியல் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். இங்கு அவர் மார்செலின் பெர்தெலாட்டை முதலில் மாணவராகவும், பின்னர் உதவியாளராகவும், இறுதியாக தனது சகப் பேராசிரியராகவும் தந்தது. இலூயி பாசுச்சருக்கு 26 வயதாக இருந்தபோது பலார்ட் அவரை ஒரு மாணவராகக் கொண்டிருந்தார். [2] ஏப்ரல் 30, 1876 இல் பாலார்டு இறந்தார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Chisholm 1911.
- ↑ "Antoine Jérôme Balard (1802–1876)". Pasteur Brewing. Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.