அன்னத்தியாகி
அன்னத்தியாகி என்பது அன்னம் (உணவு) அளித்தவனுக்கு செழியன் என்னும் பாண்டிய மன்னன் வழங்கிய ஒரு பட்டம். கொங்கு மண்டல சதகம் நூலிலுள்ள ஒரு பாடல் இதனைத் தெரிவிக்கிறது,[1]
முளசை [2] என்னும் ஊரில் பரிவேலன் என்பவன் வாழ்ந்துவந்தான். குடிக்க நீர் இல்லாமல் இருக்கும் பஞ்ச காலத்தில், கன்னித்துறைப் பாண்டியன் என்பானின் படைகள் எல்லாவற்றிற்கும் இந்தப் பரிவேலன் உணவு அளித்தான். அதனால் அந்தச் செழியன் அவனுக்கு அன்னத்தியாகி என்னும் பாராட்டு விருது அளித்தான். இந்த அன்னத் தியாகி வாழ்ந்த இடம் கொங்குமண்டலத்தில் உள்ளது.
பாடல்
தொகுபன்னப்படா தருந்தப் புனல் அற்றிடோர் பஞ்சமுற்றும்
கன்னித் துறைப் பாண்டியன் படைக்கெல்லாம் களித்தமுதிட்ட
அன்னத்தியாகி யென அச்செழியன் அழைக்க உயர்
வன்னப் பரிவேன் முளசையும் சூழ் கொங்கு மண்டலமே.[3]
தொடர்புள்ள ஆவணம்
தொகு- முளசையார் மெய்க்கீர்த்தி
தென்னவன் படைக்குச் செழிப்புறு வரையில்
அன்னம் அளித்த அன்னத் தியாகி
மேற்கோள்
தொகு- ↑ கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை, பக்கம் 119, 120
- ↑ முளசை என்னும் ஊர்
- ↑ கொங்கு மண்டல சதகம் பாடல் 77