அன்னாஜி தத்தோ சச்சிவ்

அன்னாஜி தத்தோ சச்சிவ் (Annaji Datto Sachiv) சத்ரபதி சிவாஜியின் ஆட்சியில் மராட்டிய பேரரசின் அஷ்ட பிரதான் (நவீனகால அமைச்சரவை) என்ற அமைச்சரவை பிரதிநிதிகளின் குழுவில் தலைமைச் செயலாளராக இருந்தார். [3]

அன்னாஜி தத்தோ சச்சிவ்
சர்நிவாசு மற்றும் சச்சிவ்
மராட்டியப் பேரரசு
ஆட்சியாளர்சிவாஜி (பேரரசர்)
தனிப்பட்ட விவரங்கள்
துணைவர்இலட்சுமி பாய்[1]
உறவுகள்சாமோஜி தத்தோ (சகோதரர்)
பிள்ளைகள்இரகு அன்னாஜி[2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சங்கமேசுவரத்தில் குல்கர்ணி குடும்பத்தை சேர்ந்த அன்னாஜி தத்தோ 1660 இல் சிவாஜியின் நிர்வாகத்தில் சேர்ந்தார். [4]

தொழில் தொகு

சிவாஜியின் அமைச்சரவையில் இருக்கும்போது அன்னாஜி தத்தோவின் தாரா என்று அழைக்கப்படும் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டார். [5] சிவாஜியின் மராட்டிய பேரரசு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் அமைச்சரவை அமைச்சரின் கீழ் நிர்வகிக்கப்பட்டு சர்கார்குன் என்று அழைக்கப்பட்டன. அன்னாஜி, மோராபந்த் திரியம்பக் பிங்ளே, மற்றும் தத்தோஜி பந்த் ஆகியோர் சர்கார்கூனாக நியமிக்கப்பட்டனர். [6] [7] இவர், சவுல் உள்ளிட்ட கொங்கண் மண்டலத்தைக் கட்டுப்படுத்தினார். தபோல், ராஜபூர், குதால், பாண்டே, போண்டா, மற்றும் கொப்பால் உள்ளிட்ட பிரதேசங்கள் தால்காட் அல்லது தெற்கு பிரிவு என்று அழைக்கப்பட்டது. [8] 1667 ஆம் ஆண்டில், சிவாஜி அன்னாஜியை நில வருவாய் சீர்திருத்தப் பணிக்கு நியமித்தார். இவரது பணியில் துல்லியமான நில அளவீடு, புதிய நிலங்களை சாகுபடிக்குக் கொண்டுவருதல், பாட்டீல் மற்றும் குல்கர்னி போன்ற பரம்பரை அதிகாரிகளால் கல்வியறிவற்ற விவசாயிகளின் சுரண்டலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவையும் அடங்கும். [9]

குறிப்புகள் தொகு

  1. Appasaheb Ganapatrao Pawar (1969). ताराबाईकालीन कागदपत्रे, Volume 1. शिवाजी विद्यापीठ. p. 43. A grant from Shivaji to Ragho Annaji, the son and Laxmibai, the widow of Annaji Datto. The document mentions that this Watan was formerly given by Shivaji the Great to Annaji Datto
  2. Śālinī Pāṭīla (1987). aharani Tarabai of Kolhapur, c. 1675-1761 A.D. S. Chand & Co. p. 174. When Lakshmibai and Annaji Datto's son, Ragho Annaji, told Tarabai about the wretched conditions through which they had passed after Annaji's death, and requested Tarabai to restore to them the Desh Kulkarni Vatan
  3. Apte 1974.
  4. Deopujari 1973, ப. 255.
  5. Apte 1974, ப. 43.
  6. Singh 1998, ப. 93.
  7. Kulkarni, A.R., 1990, January. Maratha Swarajya: Its Extent and Income. In Proceedings of the Indian History Congress (Vol. 51, pp. 321-325). Indian History Congress.
  8. Grewal 2005, ப. 216.
  9. Kulkarni, G. T., 1976. Land Revenue and Agricultural Policy of Shivaji – An Appraisal. Bulletin of the Deccan College Research Institute, 35(3/4), pp.73-82.

நூல் பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னாஜி_தத்தோ_சச்சிவ்&oldid=3089020" இலிருந்து மீள்விக்கப்பட்டது