அன்னா அக்சாருமோவா

சதுரங்க வீரர்

அன்னா அக்சாருமோவா (Anna Akhsharumova, பிறப்பு: சனவரி 9, 1957) என்பவர் உருசியா நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் சதுரங்க கிராண்டு மாசுட்டர் போரிசு குல்கோவின் மனைவியுமாவார்.

இவ்விருவரும் 1970 களில் சோவியத் நாட்டில் அகதிகளாக மிகவும் பிரபலமாக இருந்தனர். இறுதியாக இவர்கள் 1986 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு உருசிய பெண்கள் சாம்பியன் பட்டப் போட்டியில் அக்சாருமோவா வெற்றி பெற்றார். 1987 இல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்கப் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றார்.

1988, 1990, 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் அமெரிக்காவின் சார்பாக பங்கு பெற்று விளையாடினார் [1].

1989 ஆம் ஆண்டில் அன்னா அக்சாருமோவாவின் எலோ தரப்புள்ளிகள் 2400 ஆக இருந்தது. இதுவே இவரது அதிகபட்ச புள்ளிகளும் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Women's Chess Olympiads: Anna Akhsharumova". Olimpbase.org. பார்க்கப்பட்ட நாள் 20 October 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_அக்சாருமோவா&oldid=2959842" இலிருந்து மீள்விக்கப்பட்டது