அன்னா அசலாம்

பெண்கள் வாக்குரிமைக்காக போரடியவர்

அன்னா மரியா அசலாம் (Anna Maria Haslam; 1829 - 1922) ( பிஷர் ) ஒரு வாக்குரிமையாளர் ஆவார். அயர்லாந்தில் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார்.

அன்னா அசலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அன்னா மரியா பிஷர்

1829 (1829)
யூகல், கவுண்டி கார்க், அயர்லாந்து
இறப்பு28 நவம்பர் 1922, வயது 93
டப்ளின், அயர்லாந்து
துணைவர்தாமஸ் அசலாம் (1826–1917)

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

அன்னா மரியா பிஷர் 1829 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அயர்லாந்தின் கார்க் கவுண்டியில் உள்ள யூகல் நகரில் பிறந்தார் [1] ஜேன் மற்றும் ஆபிரகாம் ஃபிஷருக்கு 17 குழந்தைகளில் 16 வது பிறந்தார். இவரது குடும்பம் மதத்தில் நம்பிக்கை உடைய நண்பர்களின் சமய சமூகக் குடும்பம் ஆகும். இவரது குடும்பம் யூகலில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. குறிப்பாக பெரும் பஞ்சத்தின் போது அவர்களின் தொண்டு பணிகளுக்காக அவர்கள் குறிப்பிடப்பட்டனர்.

இவர் சூப் சமைப்பதற்கு உதவினார். மேலும், உள்ளூர் பெண்களுக்காக சரிகை தயாரித்தல், பின்னல் மற்றும் பூத்தையல் போன்ற குடிசைத் தொழில்களை அமைப்பதில் ஈடுபட்டார். இவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிரான பிரச்சாரம் மற்றும் நிதானம் மற்றும் அமைதிக்கான பிரச்சாரத்தை ஆதரிப்பவராக வளர்க்கப்பட்டார். இவர் நண்பர்கள் சமூகப் பள்ளிகள்,, கவுண்டி வாட்டர்ஃபோர்டில் உள்ள நியூடவுன் பள்ளி மற்றும் யார்க்கில் உள்ள கேஸில்கேட் பள்ளி ஆகியவற்றில் பயின்றார். இது பின்னர் தி மவுண்ட் ஸ்கூல், யார்க் ஆனது. [2] பின்னர் யார்க்சயரில் உள்ள அக்வொர்த் பள்ளியில் ஆசிரியராக ஆனார். லாவோஸ் மாகாணத்தில் கற்பித்துக் கொண்டிருந்த மவுண்ட்மெல்லிக்கைச் சேர்ந்த தாமஸ் அசலாம் என்பவரைச் சந்தித்தார்.[3]

அண்ணா மற்றும் தாமஸ் அசலாம்

தொகு
 
அண்ணா மற்றும் தாமஸ் அசலாம்

அன்னாவும் தாமஸ் அசலாமும் 20 மார்ச் 1854 அன்று திருமணம் செய்து கொண்டனர்.[4] இவர்கள் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. பிற்கால எழுத்துக்களில் தாமஸ் ஆண்களுக்கான கற்புக்கு ஆதரவாக வாதிட்டார். அன்னாவும் தாமஸும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் என்ற நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அன்னா தனது கணவனது பிரச்சாரங்களை ஆதரித்தார்.[3] 1825 இல் குவாக்கர் குடும்பத்தில் பிறந்த தாமஸ் ஜோசப் அசலாம் ஒரு பெண்ணியக் கோட்பாட்டாளராக இருந்தார். மேலும், 1868 முதல் அவர் பெண் உரிமைகள் மற்றும் பால்வினைத் தொழில், கருத்தடை மற்றும் பெண்கள் வாக்குரிமை போன்ற பிரச்சினைகள் பற்றிய பல தலைப்புகளைப் பற்றி எழுதினார். 

அண்ணா மற்றும் தாமஸ் இருவரும் சமூக சீர்திருத்தத்தில் தங்களின் ஆர்வங்கள் காரணமாக நண்பர்கள் சமய சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் இருவரும் தொடர்ந்து சமூகத்துடன் தொடர்பைப் பேணி வந்தனர். சமூகத்தின் போதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டதற்காக தாமஸ் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1868 ஆம் ஆண்டில் தாமஸ் "திருமணப் பிரச்சனை" என்ற துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். அதில் அவர் குடும்ப வரம்பு பற்றிய கருத்தை எழுப்பி ஆதரித்து எழுதியிருந்தார். மேலும், பாதுகாப்பான காலம் உட்பட பல கருத்தடை முறைகளை கோடிட்டுக் காட்டினார்.[5]

பெண்ணியம்

தொகு

பெண்களுக்கான வாக்குரிமைகளுக்கு போராடியதற்காக அன்னா அசலாம் இன்றும் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். அவர் 19 ஆம் நூற்றாண்டின் ஒவ்வொரு ஐரியப் பெண்ணிய பிரச்சாரத்திலும் முன்னோடியாக இருந்தார். மேலும் இவர் 1866 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான வாக்குரிமைக்காக போராடினார்.

1896 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் பெண்கள் ஏழை சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ அமைப்புகளின் உறுப்பினர்களான ஏழை சட்ட பாதுகாவலர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமையை வென்றனர்..[6] 1900 வாக்கில், கிட்டத்தட்ட 100 பெண் சட்டப் பாதுகாவலர்கள் இருந்தனர்.[7] 1898 இல் தேர்தலில் நிற்க தகுதியான பெண்களை ஊக்குவிக்கும் பிரச்சாரத்திற்கு அன்னா அசலாம் தலைமை தாங்கினார். பெண்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் தகுதி பெற்று இருந்தனர். 1913 இல், இவர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் அதன் ஆயுட்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]

இறப்பு

தொகு

தாமஸ் அசலாம் 30 ஜனவரி 1917 அன்று தனது தொண்ணூற்று இரண்டாவது வயதில் இறந்தார். இவரது உடல் டப்ளின் டெம்பிள் ஹில்லில் உள்ள நண்பர்கள் சமூக புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டனர். அன்னா அசலாம் 28 நவம்பர் 1922 அன்று தனது 93 வயதில் மாரடைப்பு காரணமாக இறந்தார்.[8] இவரும் இவரது கணவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே புதைக்கப்பட்டார்.

மரணத்திற்குப் பிந்தைய அங்கீகாரம்

தொகு

அன்னா மற்றும் தாமஸ் அசலாம் ஆகிய இருவருக்கும் 1923 ஆம் ஆண்டு டப்ளினில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கிரீனில் ஒரு நினைவு இருக்கை அமைக்கப்பட்டது. அதில் "இவர்களின் நீண்டநாள் பொதுச் சேவையின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது."

இவரது பெயர் மற்றும் படம் (மற்றும் 58 பெண்களின் வாக்குரிமை ஆதரவாளர்களின் படங்கள் உட்பட ) 2018 இல் வெளியிடப்பட்ட இலண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள மில்லிசென்ட் ஃபாசெட்டின் சிலையின் பீடத்தில் உள்ளன. [9] [10] [11]

மேற்கோள்கள்

தொகு
  1. History Journal. "Anna Haslam". History Journal. Archived from the original on 13 December 2014. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
  2. Sheils. Among Friends: The Story of The Mount School, York.
  3. 3.0 3.1 Rappaport. Encyclopedia of Women Social Reformers, Volume 1.
  4. FamilySearch. "Ireland Marriages, 1619–1898". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
  5. Quinlan, Carmel (2005). Genteel Revolutionaries: Anna and Thomas Haslam and the Irish Women's Movement. Cork: Cork University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859183946.
  6. Quinlan, Carmel (17 October 2012). "Standing up for women in politics". The Irish Times. http://www.irishtimes.com/culture/heritage/century/century-women-and-the-vote/standing-up-for-women-in-politics-1.553520. பார்த்த நாள்: 12 December 2014. 
  7. 7.0 7.1 Cullen, Mary. "Anna Haslam's Minute Book". The National Archives of Ireland. The National Archives of Ireland. Archived from the original on 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
  8. Deaths registered in the district of Rathmines, Dublin, 1922. Irish Civic Records. Irishgenealogy.com
  9. "Historic statue of suffragist leader Millicent Fawcett unveiled in Parliament Square". Gov.uk. 24 April 2018. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
  10. "First statue of a woman in Parliament Square unveiled". 24 April 2018. https://www.theguardian.com/politics/2018/apr/24/first-statue-of-a-woman-in-parliament-square-millicent-fawcett. பார்த்த நாள்: 24 April 2018. 
  11. "Millicent Fawcett statue unveiling: the women and men whose names will be on the plinth". iNews. 24 April 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_அசலாம்&oldid=3898711" இலிருந்து மீள்விக்கப்பட்டது