அன்னா சுட்டீல் பெட்டிட்

அன்னா சுட்டில் பெட்டிட் (Hannah Steele Pettit) (நவம்பர் 6, 1886 – செப்டம்பர் 10,1961) ( அன்னா பார்டு சுட்டில் பெட்டிட் எனவும் அழைக்கப்படுபவர்) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தன் வாழ்நாளில் குறிப்பிட்த்தக்க காலத்தை யெர்க்கேசு வான்காணக உதவியாளராகப் பணிபுரிந்தார். இங்கு இவரும் இவரது கணவராகிய எடிசன் பெட்டிட்டும் இணைந்து சூரிய ஒளிமறைப்பின்போதான ஒளிமுகட்டின் ஒளிப்படங்களை வெளியிட்டனர்.[1]

அன்னா சுட்டீல் பெட்டிட்
Hannah Steele Pettit
பிறப்புஆன்னா பார்டு சுட்டீல்
(1886-11-06)நவம்பர் 6, 1886
கோட்டெசுவில்லி, பென்சில்வேனியா
இறப்புசெப்டம்பர் 10, 1961(1961-09-10) (அகவை 74)
இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்யார்க்கெசு வான்காணகம் மவுண்ட் வில்சன் வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்சுவார்த்மோர் கல்லூரி சிகாகோ பல்கலைக்கழகம்
ஆய்வேடுh பெர்சேய் கொத்தின் 359 விண்மீன்களின் செவ்வியக்கமும் இடமாறு தோற்றப் பிழைகளும்
அறியப்படுவதுசூரிய ஒளிமறைப்பின்போதான ஒளிமுகட்டின் ஒளிப்படங்கள்
பிள்ளைகள்மார்யோரி பெட்டிட் எலன் பெட்டிட்

இளமை

தொகு

இவர் 1886 நவம்பர் 6 இல் பென்சில்வேனியா, கோட்டெசுவில்லியில் பிறந்தார்.[2]

கல்வி

தொகு

இவர் சுவார்த்மோர் கல்லூரியில் படித்து வானியலில் 1908 இல் இளங்களைப் பட்டமும் 1912 இல் முதுகலைப் பட்டமும் பெற்ரார், இவர் முனைவர் பட்டம் பெற 1919 இல் சிகாகோ பல்கலைக்கழகம் சென்று,.[2] "h பெர்சேய் கொத்தின் 359 விண்மீன்களின் செவ்வியக்கத்தையும் இடமாறு தோற்றப் பிழைகளையும்" பற்றிய ஆய்வுரையை முடித்தார்.[3]

வாழ்க்கைப்பணி

தொகு

சுவார்த்மோர் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், சுப்பிரவுல் வாண்காணகத்தில் வானியல் நோக்கீட்டாளராகப் பணியில் சேர்ந்தார். இவர் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்யும்போது, பெட்டிட் மவுண்ட் வில்சன் வான்காணகத்துக்கும் கார்னிகி அறிவியல் நிறுவனத்துக்கும் பணியாற்றிய இவர் பிறகு தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழித்தார்.[2] இவர் தன் வாழ்நாள் பணிக்காலத்தில் பல சூரிய ஒளிமறைப்புகளை நோக்கீடு செய்ய சென்றுவந்துள்ளார்.[2]. முதலில் இவர் 1918 இல் கொலராடோ, மத்தேசன் சூரிய ஒளிமறைப்புக்குச் சென்றுவந்தார்.[2]. இரண்டாவதாக, 1923 இல் நியூ ஆம்ப்சயர் பாயின்ட் உலோமா சூரிய ஒளிமறைப்புக்குச் சென்றுவந்தார்[2]. சில ஆண்டுகள் கழித்து, இவர் 1930 இல் நிகழ்ந்த சூரிய ஒளிமறைப்பைக் காண, நியூ ஆம்ப்சயர் அனிலேக்குக்குச் சென்றுவந்தார். இறுதியாக, இவர் நியூ ஆம்ப்சயரில் இலங்காசுட்டரில் 1932 இல் நிகழ்ந்த சூரிய ஒளிமறைப்புக்கு சென்றுவந்தார்.[2]

இவர் தன் வாழ்நாளில் பசிபிக் வானியல் கழக உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இக்கழகத்தில் பணிசெய்யும்போது இவர் இக்கழகம் வெளியிட்ட பல அறிவார்ந்த கட்டுரைகளை மீள்பார்வை செய்துள்ளார்.[4]

வெளியீடுகள்

தொகு
  • 52 விண்மீன்களின் இடமாறு தோற்றப் பிழைகள்[5]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் தன் முனைவர் ப்ட்ட ஆய்வின்போது எடிசன் பெட்டிட்டை மணந்தார்ரிவருக்கு எலன் மர்யோரி என இருபெண் மகவுகள் உண்டு.[1]. இவரது மூத்த மகள் 1922 இல் பிறந்தார்.[1]. இவர் 1961 செப்டம்பர் 10 இல் கலிபோர்னியா, இலாசு ஏஞ்சலீசில் தன் 74 ஆம் அகவையில் இறந்தார், after suffering a severe stroke[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Nicholson, Seth B. (1962). "EDISON PETTIT 1889-1962". Publications of the Astronomical Society of the Pacific 74 (441): 495–498. doi:10.1086/127863. Bibcode: 1962PASP...74..495N. https://www.jstor.org/stable/40676913. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Ogilvie, Marilyn Bailey; Harvey, Joy Dorothy (2000). The Biographical Dictionary of Women in Science: L-Z. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415920407.
  3. Reprint and circular series of the National Research Council. National Academies. 1919.
  4. Pettit, Hannah Steele (1943). "Review of Dictionary of Science and Technology in English-French-German-Spanish". Publications of the Astronomical Society of the Pacific 55 (324): 166–167. doi:10.1086/125537. Bibcode: 1943PASP...55..166.. http://www.jstor.org/stable/40669808. 
  5. Biesbroeck, George Van; Pettit, Hannah Bard Steele (2016-04-24). Parallaxes of Fifty-Two Stars (in ஆங்கிலம்). Bibliolife DBA of Bibilio Bazaar II LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781354434642.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_சுட்டீல்_பெட்டிட்&oldid=3961077" இலிருந்து மீள்விக்கப்பட்டது