அன்னா பெர்ஸ்கால்னே
அன்னா பெர்ஸ்கால்னே (Anna Bērzkalne) (பிறப்பு: 1891 சனவரி 15 - இறப்பு: 1956 மார்ச் 1) இவர் ஒரு லாட்வியன் ஆசிரியரும் மற்றும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார், இவர் லாட்வியன் நாட்டுப்புறக் காப்பகங்கள் என்பதை நிறுவினார். 1924இல் மற்றும் அதன் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் தலைவராக இருந்தார். 1933இல் லாட்வியன் நாட்டுப்புற பாலாட்களைப் பற்றிய அவரது பகுப்பாய்விற்கு கிரிஸ்ஜ்னிஸ் பரோன்ஸ் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. நாட்டுப்புற ஆய்வுகளில் பட்டம் பெற்ற முதல் லாட்வியன் இவராவார். மேலும் லாட்வியாவில் கல்வித் துறையாக நாட்டுப்புற ஆய்வை வளர்ப்பதில் மைய நபர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅன்னா பெர்ஸ்கால்னே 1981 சனவரி 15, அன்று உருசிய பேரரசின் லிவோனியாவின் ஆளுநரான, எட் (நீ ரெயின்சன்) மற்றும் ஜூரிஸ் பெர்ஸ்கால்ன் ஆகியோருக்கு வெஜாவா பாரிசின் ஆரிக் என்ற ஊரில் பிறந்தார். [1] [2] இவர் இவரது பெற்றோர்களின் ஐந்து குழந்தைகளில் மூத்தவராவார். மேலும், இவரது தாயின் குடும்ப வீட்டில் பிறந்தார். 1895ஆம் ஆண்டில், அவர்கள் வெஸ்டீனா பாரிசில் உள்ள இக்லாஸில் மற்றொரு வீட்டை வாங்கினர். [2] இவர் வெஜாவா பாரிசு பள்ளியில் பயின்றார். பின்னர் 1903 மற்றும் 1908 க்கு இடையில் தனியார் அட்டிஸ் ஜெனிக் ஜிம்னாசியப் பள்ளியில் படித்தார். [1] [2]
ஆசிரியராக தகுதி பெற்றதால், 1909 மற்றும் 1911க்கு இடையில் அல்ஸ்கிவி பாரிஷில் உள்ள எமெரி பள்ளியில் பெர்ஸ்கால்னே கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். 1913 இல் கசான் உயர் பெண்கள் பாடநெறிகளில் சேருவதற்கு முன்பு இராணுவத்தில் சேர தனது உறவினர் ஒருவருடன், 1912ஆம் ஆண்டில், முதலில் விளாடிமிர் ஆளுநரிடம்சேர்ந்தார். பின்னர் உசுரிஸ்க்குச் சென்றார். [1] இவர் ரஷ்ய-ஸ்லாவிக் மொழியியல் துறையில் படித்தார். வால்டர் ஆண்டர்சனின் கீழ் மொழியியல் மற்றும் நாட்டுப்புற படிப்புகளை எடுத்தார். [3] ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளின் பின்னிஷ் பள்ளியின் முன்னணி பயிற்றுநர்களில் ஒருவரான ஆண்டர்சன். நாட்டுப்புறக் கதைகளின் கலை வடிவம் அல்லது கட்டமைப்பு மற்றும் பாணியை மதிப்பிடுவதற்குப் பதிலாக, ஆண்டர்சன் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புனைவுகளின் வரலாற்று மற்றும் புவியியல் வேறுபாடுகளை காலப்போக்கில் ஒப்பிட்டுப் பார்க்க பரிந்துரைத்தார். [4] 1917ஆம் ஆண்டில், இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஒலிப்பு மாற்றங்கள் குறித்த தனது ஆய்வறிக்கையை இவர் சமர்ப்பித்தார். மேலும் பைலாலஜி பட்டமும் பெற்றார். [5]
தொழில்
தொகுசான்றிதழ் பட்டம் பெற்ற பிறகு, பெர்ஸ்கல்னே கசானில் லாட்வியன் அகதிகள் பள்ளியில் பணிபுரிந்தார். பின்னர் இவர் கல்வி புள்ளிவிவரத் துறையின் தலைவராகவும், 1919 முதல் வோல்கா நீர் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறையிலும் பணியாற்றினார். [1] 1920ஆம் ஆண்டில், லாட்வியன் சுதந்திரப் போரின் முடிவிற்குப் பிறகு, இவர் லாட்வியாவுக்குத் திரும்பி, ரிகா மாநில மேல்நிலைப் பள்ளி எண் 2இல் கற்பிக்கத் தொடங்கினார். [2] லாட்வியன் மொழி வகுப்புகளை கற்பிப்பதில் இவர் குறிப்பாக மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், அந்த வேலை இவருக்கு ஒரு நிலையான வருமானத்தை வழங்கியதுடன், இவரது ஆராய்ச்சியைத் தொடர அனுமதித்தது. [3] இவர் 1944 வரை பள்ளி எண் 2இல் இருந்தார். [1]
மரணம் மற்றும் ஆளுமை
தொகுபெர்ஸ்கால்னே 1956 மார்ச் 1, அன்று காலமானார். இவரது உடல் ரிகாவில் உள்ள வன கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. [1] [2] இவரது மரணத்திற்குப் பிறகு, சோவியத் காலத்தில் இவர் மறக்கப்பட்டார். ஆனால் பின்னர், நவீன அறிஞர்களால் புத்துயிர் பெற்றார். [6] நாட்டுப்புற ஆய்வுகளில் பட்டம் பெற்ற முதல் லாட்வியன் மற்றும் லாட்வியன் நாட்டுப்புறக் காப்பகங்களின் நிறுவனர் என்ற பெயரில் இவர் அங்கீகரிக்கப்படுகிறார். [7] லாட்வியாவில் ஒரு கல்வித் துறையாக நாட்டுப்புற ஆய்வை உருவாக்கிய மைய நபர்களில் ஒருவராகவும் இவர் அங்கீகரிக்கப்படுகிறார். [7] 52 விஞ்ஞான ஆய்வுகளின் ஆசிரியராக இவரது வெளியீடுகள் லாட்வியன் நாட்டுப்புறக் கதைகள் இரண்டையும் சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு வரவும், சர்வதேச நாட்டுப்புறக் கதைகளை லாட்வியன் பார்வையாளர்களிடம் கொண்டு வரவும் முயற்சித்தன. [7] [8] லாட்வியா பல்கலைக்கழகத்தின் கல்வி நூலகத்தில் இவரது ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. [7]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Latviešu folkloras krātuve 2001.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Stars n.d..
- ↑ 3.0 3.1 Treija 2019.
- ↑ Oinas 1973.
- ↑ Ķencis 2012.
- ↑ Treija 2018.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Treija 2011.
- ↑ Bula 2017.