அன்பளிப்புப் பிரதி

அன்பளிப்புப் பிரதி என்பது ஒரு நூலாசிரியரால் கையொப்பமிடப்பட்டு (எழுத்தாளருக்கு அறிமுகமானவராக இருக்கவேண்டிய அவசியமில்லை) வழங்கப்பட்ட ஒரு புத்தக பிரதி ஆகும். அல்லது எழுத்தாளர் கையொப்பமிட்டு கொடுத்த ஒரு புத்தகம் ஆகும். [1][2][3] ஒரு எழுத்தாளர் புத்தக வெளியீட்டின்போது விழாவுக்கு வந்தவருக்கு வழங்கும் புத்தகத்தில் கையெழுத்து இடுவதுண்டு, அல்லது புத்தகத்தை வாங்குபவரே விரும்பி எழுத்தாளரிடம் கையெழுத்தை விரும்பிப் பெறுவதுண்டு. பொதுவாக இந்த அன்பளிப்புப் பிரதி சாதாரண பிரதியைவிட மதிப்பு வாய்ந்ததாக, அரிதானதாக புத்தக சேகரிப்பாளர்களால் கருதப்படுகிறது.

அன்பளிப்புப் பிரதியில் கையொப்பமிடும் ஆசிரியர்

மேற்கோள்கள்

தொகு
  1. Carter, John (1995). ABC for Book Collectors. Oak Knoll Press.
  2. "Glossary of Book Terms". AbeBooks. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.
  3. "presentation, n.". OED Online. Oxford University Press. June 2013. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பளிப்புப்_பிரதி&oldid=3503460" இலிருந்து மீள்விக்கப்பட்டது