அன்பு பொன்னோவியம்

அன்பு பொன்னோவியம் ஒரு ஆதி திராவிட சிந்தனையாளர் மற்றும் வரலாற்றாசிரியர். அயோத்திதாச பண்டிதரின் நூல்களை கண்டுபிடித்து மீண்டும் வெளியிட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மலேசியாவில் உள்ள பினாங்கு நகரில் அன்பு பொன்னோவியம் 1923 ஆண்டு பிறந்தார். பெற்றோர் அன்பு பெருமாள் பிள்ளை, கங்கையம்மாள். பாட்டனாரோடு 1933ல் இந்தியா வந்த பொன்னோவியம் திண்டிவனத்திற்கு அருகே வாழ்ந்தார். பிறகு சென்னைக்கு வந்தவர் எழும்பூரில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்ந்து பட்டம் பெற்றார். பழங்குடி மக்களின் நலனில் ஆர்வம் கொண்ட பொன்னோவியம் பழங்குடி மக்களில் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்த பொன்னோவியம், 1951 ஆம் ஆண்டில் அருங்காட்சியகத்தின் பொறுப்பலுவலராக ஆனார். 1983-ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பௌத்தத்தில் ஈடுபாடுள்ள இவர், அயோத்திதாசர் முன்வைத்த தமிழ் பௌத்தத்தை முன்வைப்பதற்காக வாழ்நாள் முழுக்க உழைத்தார். ஆதி திராவிட சிந்தனைகளை வளர்க்கவும் முன்னோடியான ஆதி திராவிட சிந்தனையாளர்களை மீட்கவும் பாடுபட்டார். இவர் 2002 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.

நூல்கள் தொகு

  • அயோத்திதாசர் சிந்தனைகள்
  • உணவில் ஒளிந்திருக்கும் சாதி
  • மக்களுக்கு உழைத்த பெருமக்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_பொன்னோவியம்&oldid=3905706" இலிருந்து மீள்விக்கப்பட்டது