அன்விதா கொல்லிப்பாறை
அன்விதா கொல்லிப்பாறை (Anvitha Kollipara) இந்திய-அமெரிக்க சமூக ஆர்வலர் ஆவார். 2006 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கேர்குட்டு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.[1][2][3][4] தெலுங்கானா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நெக்சுட்டீன் நிறுவனத்திலும் பணிபுரிகிறார்.[5][6][7][8]
அன்விதா கொல்லிப்பாறை Anvitha Kollipara | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 18, 2006 நியூ ஹேவென், கனெடிகட் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஐதராபாத் பன்னாட்டு பள்ளி (தொடர்கிறார்) |
செயற்பாட்டுக் காலம் | 2020–முதல் |
அமைப்பு(கள்) | கேர்குட்டு |
அறியப்படுவது | சமூக செயற்பாடு |
விருதுகள் | தொழில்நுட்ப மையத்தின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணி விருது |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅன்விதா கொல்லிப்பாறை கனெக்டிகட்டில் உள்ள நியூ ஏவனில் 2006 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் தேதியன்று வாசு கொல்லிப்பாறை மற்றும் சந்தியா கொல்லிப்பாறை தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். வட கரோலினாவில் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, இவரது குடும்பம் மீண்டும் ஐதராபாத்து திரும்பியது. அன்விதா கொல்லிப்பாறை விவாதம், அரசியல் நிகழ்வுகளில் பொதுப் பேச்சு, குச்சிப்புடி நடனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். தனது 11 ஆவது வயதில் அன்விதா 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய பிரிவில் விவாதப் போட்டியில் வென்றார். நியூ இந்தியன் எக்சுபிரசு மற்றும் எடெக்சின் 75ஆவது இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்புப் பேச்சாளராக இருந்தார்.[9]
தொழில்
தொகுதன்னுடைய 14 வயதில் கோவிட்-19 நெருக்கடியின் போது தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து கேர்குட்டு என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.[10][11] குழுவானது குறைந்த வளங்கள் காரணமாக அதிக ஆபத்தில் இருந்த அருகாமையில் முதியோர் இல்லங்களைக் கண்டறிந்தது அவ்வீடுகளுக்கான மருத்துவப் பொருட்களுக்கான பணத்தை திரட்டியது.[12][13]
ஆற்றல் சுவராச்சு அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்து, தனிப்பட்ட குழந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான சூரிய விளக்குகளை வழங்குவதற்காக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் நன்மைகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தார்.[14][15][16]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fox, MeiMei. "3 Teens Who Are Changing The World". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ Madaik, Devyani (2023-01-05). "16-Year-Old Anvitha Is Educating India's Rural Communities About The Benefits Of Solar Power". NDTV-Dettol Banega Swasth Swachh India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ "Meet Anvitha Kollipara, The Indo-American Social Activist Helping Underprivileged Senior Citizens". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
- ↑ Live, A. B. P. (2023-04-07). "इस टीनेज गर्ल के बारे में जानकर आप भी रह जाएंगे हैरान, उम्र छोटी मगर काम बड़े". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
- ↑ Today, Telangana (2021-12-07). "T-Hub announces seventh batch of Lab32 programme". Telangana Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ "Hyderabad's young future leaders transforming world into a sustainable path - The Pioneer" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-12-29. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ "Using solar power to light up the lives of underprivileged kids". Global Indian Youth (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ "Anvitha Kollipara: The socialist with an intention to help other in many ways". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
- ↑ Today, Telangana (2022-12-10). "Two Hyderabad school students to present papers at Impact Summit at UN". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ "This 14 year old from Hyderabad is helping light up the homes and lives of rural children with solar lamps". m.edexlive.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ Light, Points of. "Amid COVID-19 Pandemic, Teen's "CareGood Foundation" Serves Most Vulnerable, from Young to Old". Points of Light (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ "14- YO's CareGood Foundation supplies free medicines to the elderly and solar power to village kids". BookOfAchievers (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ Fueladream. "ANVITHA KOLLIPARA'S CAMPAIGN TO PROVIDE HIGH QUALITY TABLETS TO STUDENTS IN HYDERABAD. by Nirmaan Organization | Crowdfunding India". ANVITHA KOLLIPARA'S CAMPAIGN TO PROVIDE HIGH QUALITY TABLETS TO STUDENTS IN HYDERABAD. by Nirmaan Organization | Crowdfunding India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ Today, Telangana (2021-02-03). "Hyderabad girl sets out to spread the light". Telangana Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ Moulika KV (December 10, 2020). "Hyderabad teenager lights up lives, gives new hope to rural kids". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
- ↑ "Hyderabad girl wants to spread the light" (in en-US). Deccan News. 2021-02-02. https://deccan.news/hyderabad-girl-wants-to-spread-the-light/.