'அன பெறய' எனும் சிங்களச் சொல் கட்டளைப் பிறப்பிக்கும் மேளம், பறைசாட்டும் மேளம் என்ற பொருளைத்தரும். பழங்கால வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாத காலகட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று கூறும் போது அடிக்கப்பட்ட மேளமே 'அன பெறய' எனப்படுகிறது.

இவ்வாறாக புராதன சிங்கள மக்கள் மத்தியில் செய்திகளை மக்களுக்கு அறிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பறையான 'அன பெறய' தவில் பெறயை ஒத்தது. பருமனிலும், அமைப்பிலும் தவில் பெறயை ஒத்திருந்தாலும் மேற்புற அலங்காரத்தில் வித்தியாசம் காணப்பட்டது. 'அன பெறய' இசைக்கப்படும்போது 'கடிப்பு' என அழைக்கப்படும் மேளத்தின் ஒரு பக்கம் கம்பொன்றின் மூலமும், மறுபக்கம் கையினாலும் இசைக்கப்படும்.

இலங்கையில் சில நீதிமன்றத் தீர்ப்புகளை பறைசாட்டுவதற்காக தற்போதும் இந்த அன பெறய பயன்படுத்தப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன_பெறய&oldid=2761384" இலிருந்து மீள்விக்கப்பட்டது