அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு

அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கலாசார முக்கோணத் திட்ட அலுவலர்களில் ஒருவரான எஸ். ஏ. பண்டாரநாயக்கா என்பவரே இக்கல்வெட்டை முதலில் கவனித்தவர். 1998ல் யப்பானியக் கல்வெட்டறிஞர் கராசிமா, தமிழ்நாட்டு அறிஞர்களான பேராசிரியர் சுப்பராயலு, பேராசிரியர் ப. சண்முகம், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சி. பத்மநாதன் ஆகியோர் அனுராதபுரத்து அழிபாடுகளைப் பார்க்கச்சென்றபோது இந்தக் கல்வெட்டுப்பற்றி அறிந்து அதைப் படியெடுத்தனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. பத்மநாதன், சி., 2006. பக். 39, 40.

உசாத்துணைகள்

தொகு
  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.

இவற்றையும் பார்க்கவும்

தொகு