அபர்கா பரிசு
மருத்துவர் ஜுவான் அபர்கா பன்னாட்டு மருத்துவ அறிவியல் விருது என்பது அபர்கா பரிசு (Abarca Prize) என்று அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த உயிரியலில் மருத்துவக் கண்டுபிடிப்பின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு விருதாகும்.[1][2]
அபர்கா பரிசு | |
---|---|
மருத்துவ அறிவியலுக்கான மருத்துவர் ஜூவான் அபார்கா பன்னாட்டு விருது | |
விருது வழங்குவதற்கான காரணம் | உலக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்மருத்துவ ஆய்விற்காக |
இதை வழங்குவோர் | Fundación de Investigación HM Hospitales |
நாடு | எசுப்பானியா |
வெகுமதி(கள்) | 100,000 € |
நிறுவப்பட்டது | 2021 |
இணையதளம் | https://www.abarcaprize.com/ |
பின்னணி
தொகு2020ஆம் ஆண்டில் பண்டேசியன் டி இன்வெசுடிகேசன் எச். எம் மருத்துவமனையினால் உருவாக்கப்பட்டது. இது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அல்லது மறுவாழ்விற்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிய ஒரு நபரின் அறிவியல் அல்லது மருத்துவ ஆய்வினை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.[3]
இந்த விருது 100, 000 யூரோக்கள் மதிப்பில் எசுபானிய அறுவை சிகிச்சை நிபுணர், எச். எம். மருத்துவமனை நிறுவனர் ஜுவான் அபர்கா காம்பாலால் நிறுவப்பட்டது.[4][5] பண்டேசியன் டி இன்வெசிடிகேசன் எச். எம். மருத்துவமனைகளால் நியமிக்கப்படும் அறிவியல் சமூகத்தின் நடுவர் குழுவினால் விருது தீர்மானிக்கப்படுகிறது.
அபர்கா பரிசு
தொகு2021
தொகுஅபர்கா விருதின் முதல் விருது வழங்கும் விழா அக்டோபர் 2021-இல் நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஆறாம் பெலிப்பே மன்னர் தலைமை தாங்கினார்.[6] நடுவர் குழுவில் இன்ஸ்டிடியூடோ டி இன்வெசுடிகேசன்சு பயோமெடிக்காசு டி மாட்ரிட் (IIBM) நிறுவனப் பேராசிரியரான ஆல்பர்டோ முனோசு தலைமை தாங்கினார். தி லான்செட் ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்டன், ஐ. சி. எசு. மகேரி மருத்துவமனையின் அறிவியல் இயக்குநர் சில்வியா ஜி. ப்ரியோரி, பாலியோஎந்த்ரோபாலஜிஸ்ட் ஜுவான் லூயிசு அர்சுகா மற்றும் எசுபானியா உயிர் அறவியல் குழுவின் முன்னாள் தலைவர் பெடரிகோ டி மொன்டால்வோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.[7] மனித நோய்த்தொற்றுகள் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடும் ஒரு நபரின் திறனை பாதிக்கும் மரபணு மாறுபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் ஜீன்-லாரண்ட் காசாநோவாவிற்கு முதல் அபர்கா பரிசு வழங்கப்பட்டது.[2] மருத்துவர் காசாநோவா நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக மருத்துவமனை ஆராய்ச்சியாளராகவும், மனித மரபியல் மற்றும் தொற்று நோய்களுக்கான தூய கில்சு ஆய்வகத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
2022
தொகு2022ஆம் ஆண்டிற்கான இந்தப் பரிசு பாசுடர் நிறுவனப் பேராசிரியர் பிலிப் ஜே. சான்சோனெட்டி, சிஜில்லோசிசு அல்லது பேசில்லரி வயிற்றுப்போக்கு குறித்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.[8] சிஜெல்லா என்ற பாக்டீரியத்தால் ஏற்படும் இந்த வயிற்றுப்போக்கு நோய் வளர்ந்த நாடுகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக இது குழந்தைகளைப் பாதிக்கிறது.[9] இந்த ஆண்டு விருதினை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் உறுப்பினர்களாகப் பேராசிரியர்களான ஜுவான் லூயிசு அர்சுயாகா, சில்வியா பிரியோரி, ஜீன்-லாரண்ட் காசநோவா மற்றும் பெடரிகோ டி மொன்டால்வோ ஆகியோர் செயல்பட்டனர். மாட்ரிட் பயோமெடிக்கல் ரிசர்ச் நிறுவனத்தினைச் சேர்ந்த பேராசிரியர் ஆல்பர்டோ முனோசு தலைமை தாங்கினார்.[10] இந்த விருதை எசுப்பானிய சுகாதாரத்துறை செயலாளர் சில்வியா கால்சோன் வழங்கினார்.[11]
2023
தொகுபேராசிரியர் டக்ளசு ஏ. மெல்டன், நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதற்காக மேற்கொண்ட ஆய்விற்காக 2023ஆம் ஆண்டிற்கான அபர்கா பரிசை வென்றார்.[12] டக்ளசு ஏ. மெல்டன் ஆர்வர்டு தண்டு உயிரணு நிறுவன இணை இயக்குநராகவும், ஆர்வர்டு ஹியூஸ் மருத்துவ நிறுவன ஆய்வாளராகவும், வெர்டெக்சு மருந்தக நிறுவனத்தில் ஆய்வாளராகவும் உள்ளார்.[13]
மெல்டனின் ஆராய்ச்சி தண்டு உயிரணுவினை இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா உயிரணுவாக மாற்றும் செயல்முறையை முன்னெடுத்துள்ளது. இது வகை 1 நீரிழிவு நோய்க்கு உயிரணு மாற்றுச் சிகிச்சையைச் செயல்படுத்த வழி வகுக்கின்றது.[13] இந்த விருதை எசுப்பானிய சுகாதார அமைச்சர் ஜோசு மினோன்சு வழங்கினார்.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BOE.es - BOE-B-2021-11350 FUNDACIÓN DE INVESTIGACIÓN HM HOSPITALES". www.boe.es. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ 2.0 2.1 "El rey pide convertir el potencial científico español en "riqueza industrial"". www.efe.com (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ Prize, Abarca. "Creation Of The International Award For Medical Sciences ABARCA PRIZE". www.prnewswire.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Creation Of The International Award For Medical Sciences ABARCA PRIZE". AP NEWS (in ஆங்கிலம்). 2021-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "El Rey defiende incentivar "el diálogo entre ciencia e industria" y un lenguaje común para favorecer el alcance de metas". COPE (in ஸ்பானிஷ்). 2021-10-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Inicio - Actividades y Agenda - Entrega de la I Edición del Premio Internacional de Ciencias Médicas Doctor Juan Abarca "Abarca Prize"". www.casareal.es. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ CNIC. Spanish National Center for Cardiovascular Research. Silvia Priori
- ↑ ""El Abarca Prize resalta el protagonismo de la Medicina en la sociedad"". Redacción Médica (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
- ↑ "El profesor Philippe J. Sansonetti recibe el Abarca Prize". abc (in ஸ்பானிஷ்). 2022-10-27. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
- ↑ ECG, Redacción. "Abarca Prize nombra como presidente de su jurado a Alberto Muñoz". www.elcorreogallego.es (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
- ↑ "Silvia Calzón, sobre el 'Abarca Prize': "Cumple el objetivo de dar visibilidad al mundo de la ciencia y la investigación"". El Español (in ஸ்பானிஷ்). 2022-10-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
- ↑ Prize, Abarca. "PROF. DOUGLAS A. MELTON, WINNER OF THE III EDITION OF THE 'ABARCA PRIZE' FOR HIS DISRUPTIVE CURE OF TYPE 1 DIABETES, IS RECEIVED BY HIS MAJESTY THE KING OF SPAIN". www.prnewswire.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-13.
- ↑ 13.0 13.1 "Douglas A. Melton, Ph.D." hsci.harvard.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-13.
- ↑ "El Abarca Prize vuelve para "reconocer la vida y su calidad"". Redacción Médica (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-13.