அபர்ணா வைதிக்

அபர்ணா வைதிக் (Aparna Vaidik)(பிறப்பு 22 செப்டம்பர்) என்பவர் இந்திய வரலாற்றாசிரியர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். இவரது சமீபத்திய புத்தகம் மை சன் இன்கெரிடன்சு: ஏ சீக்கரட் கிஸ்டரி வர்லாறு ஆப் பிளட் ஜஸ்டிசு அண்ட் லைங்கிங்சு இன் இந்தியா (My Son's Inheritance: A Secret History of Blood Justice and Lynchings in India) சனவரி 2020-ல் வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் நிலவும் உள்ளார்ந்த அமைதியான கலாச்சாரத்திற்குசவால் விடுகிறது.

அபர்ணா வைதிக்
Aparna Vaidik
பிறப்பு22 செப்டம்பர்
இந்தூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
தொழில்வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர், இதழியலாளர்
தேசியம்இந்தியா
காலம்2000 – முதல்
கருப்பொருள்இந்திய வரலாறு, இந்திய அரசியல்
இணையதளம்
www.ashoka.edu.in/welcome/faculty#!/aparna-vaidik-17

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அபர்ணா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். 

எழுதுதல்

தொகு

அபர்ணா வைதிக்கின் முதல் புத்தகம், இம்பீரியல் அந்தமான்: காலனித்துவ சந்திப்பு மற்றும் தீவு வரலாறு, பால்கிரேவ் மேக்மில்லனின் கேம்பிரிட்ஜ் இம்பீரியல் மற்றும் பிந்தைய காலனித்துவ ஆய்வுகள் தொடரின் ஒரு பகுதியாக இவர் வாசிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியராக இருந்தபோது வெளியிடப்பட்டது. இது அந்தமான் தீவுகளின் தண்டனை வரலாற்றை ஆராய்கிறது. இவரது இரண்டாவது புத்தகம், மை சன் இன்கெரிடன்சு: ஏ சீக்கரட் கிஸ்டரி வர்லாறு ஆப் பிளட் ஜஸ்டிசு அண்ட் லைங்கிங்சு இன் இந்தியா, பன்னாடுக் கவனத்தை ஈர்த்தது.[1][2][3][4] இவரது அடுத்த புத்தகம், வெயிட்டிங் பார் சுவராஜ்: இன்னர் லைவ்சு ஒஃப் இந்தியன் ரெவுலுசனரிசு (Waiting for Swaraj: Inner Lives of Indian Revolutionaries) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டு 2021-ல் வெளிவந்தது. பிரித்தானிய இந்தியாவில் நடந்த இந்தியப் புரட்சியாளர்களின் புகழ்பெற்ற விசாரணை பற்றிய மற்றொரு புத்தகம், ரெவுலசனரியிசு ஆன் டிரையல்:செடிசன், பீட்ரையல் அண்ட் மர்ட்ய்டாம் 2022 (Revolutionaries on Trial: Sedition, Betrayal and Martyrdom, 2022) அலெப் என்பவரால் வெளியிடப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அபர்ணா துடுப்பாட்ட பயிற்சியாளரை மணந்தார். இந்த இணையருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தில்லியில் வசிக்கிறார்கள். 

மேற்கோள்கள்

தொகு
  1. "Lynching reveals India's long history of violence, belying the idea of a non-violent country". Digital article. The Scroll (India). பார்க்கப்பட்ட நாள் June 22, 2020.
  2. "Lynching in India's past: This book shows public violence is ingrained in the history of the land". Digital article. The Scroll (India). பார்க்கப்பட்ட நாள் June 22, 2020.
  3. "Books of the week: From The Deoliwallahs to Aparna Vaidik's history of lynching in India, our picks". Digital article. Firstpost (India). 16 February 2020. பார்க்கப்பட்ட நாள் June 22, 2020.
  4. "Thank the printing press for making the cow into a Hindu gaumata". Digital article. ThePrint (India). 15 February 2020. பார்க்கப்பட்ட நாள் June 22, 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்ணா_வைதிக்&oldid=3673923" இலிருந்து மீள்விக்கப்பட்டது