அபு மலை குளிர்கால விழா - இராசத்தான்
ராஜஸ்தான் மாநிலத்தின் அபு மலையில் குளிர்கால விழா ஆண்டுதோறும் டிசம்பர் 29-31 வரை நடைபெறுகிறது. இந்த விழாவை இராசத்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் அபு மலை நகராட்சி வாரியம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. [1]
கடல் மட்டத்திலிருந்து 1,219 மீ உயரத்தில் அமைந்துள்ள அபு மலை தான், ராஜஸ்தானில் உள்ள ஒரே மலைவாசஸ்தலம் ஆகும்.
இந்த குளிர்கால விழாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய நடனம், கச்சேரிகள், கண்காட்சிகள் மற்றும் வானவேடிக்கை காட்சிகள் போன்றவை அடங்கியுள்ளன; ராஜஸ்தான் மற்றும் ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் முக்கியமாக பங்கேற்றுள்ளனர். இந்த திருவிழா நக்கி ஏரிக்கு ஊர்வலமாக மக்கள் செல்வதில் இருந்து தொடங்குகிறது.[2]
விழாவின் மற்ற முக்கிய நிகழ்ச்சிகளான சூஃபி கதக் நடனம் மற்றும் டாப், கூமர் மற்றும் கைர் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பங்கேற்கும் மக்களை ஈர்க்கும் வகையில் நடைபெறும் மேலும் காத்தாடியில் பறத்தல், சூடான காற்று பலூனிங், கிரிக்கெட், கில்லி தண்டா, கவிதை வாசிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற பொழுதுபோக்குகளும் அடங்கும்.
கொண்டாடட்டம்
தொகுஇந்த திருவிழா ராஜஸ்தானின் மிக முக்கியமான மற்றும் நன்கு பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகும். அழகிய மாநிலமான ராஜஸ்தானின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மக்கள் அனைவருக்கும் அவர்களின் சலிப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு இடைவெளியை எடுத்து தங்களை புத்துணர்ச்சியாக்கும் ஒரு முயற்சியாக தொடங்கியது.பல பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் தங்கள் ஆத்மார்த்தமான குரல்கள் மற்றும் இசையால் கலந்துகொள்ளும் பார்வையாளர்களை மயக்குகிறார்கள். நீர் விளையாட்டுகள் மற்றும் ரோயிங் போன்ற பல சாகச நடவடிக்கைகள் இங்கு நடைபெறுவதால் நக்கி ஏரி ஒரு முக்கியமான இடமாகும்.ஒரு பெரிய மற்றும் அற்புதமான வாணவேடிக்கை காட்சியுடன் அபு மலை குளிர்கால திருவிழா முடிவுக்கு வருகிறது. தீப்தான் என்று அழைக்கப்படும், நக்கி ஏரியில் விடப்படும் ஏராளமான மிதக்கும் விளக்குகள் இந்த நிகழ்வின் மற்றொரு அற்புதமான சிறப்பம்சமாகும், இது உண்மையிலேயே மிகவும் அழகானதும் இதயத்தை மயக்குகிறதுமான வண்ணமயமான திருவிழாவாகும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "அபு மலை குளிர்கால விழா". பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
- ↑ "அபு மலையின் குளிர்கால விழா".
- ↑ "அபு மலையில் குளிர்கால விழா".