அபெர்தீன் அருவி
அபெர்தீன் அருவி (Aberdeen Falls) 98 மீட்டர் உயரமுள்ள ஒரு அருவி ஆகும். இது இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தனை அருகில் உள்ள கெகல்காமு ஒயாவில் உள்ளது. ஸ்காட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமும் அபெர்டீன்ஷையரின் தலைநகருமான அபெர்தீனின் பெயரால் இந்த அருவி அழைக்கப்படுகிறது. கெகல்காமு ஓயா கெலானி ஆற்றின் முக்கிய துணை நதியாகும்.
அபெர்தீன் அருவி | |
---|---|
அமைவிடம் | கினிகத்தனை, இலங்கை |
ஆள்கூறு | 06°56′54″N 80°30′07″E / 6.94833°N 80.50194°E |
வகை | குதிரைவால் |
மொத்த உயரம் | 98 m (322 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
மொத்த அகலம் | 8 m (26 அடி) |
நீர்வழி | கெகல்காமு ஓயா |
கினிகத்தனை நகரத்திலிருந்து அபெர்தீன் நீர்வீழ்ச்சியை அடைய, அம்படலே சாலையில் பயணம் செய்து புத்தர் சிலை வரை செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து சுமார் 1.2 கி.மீ. நடந்து சென்று இந்த அருவியினை அடையலாம். அருவியின் தடாகத்தின் நடுவில் குளிப்பதும், நீந்துவதும் கடந்த காலங்களில் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பின்னால் ஒரு பெரிய பாறையால் மூடப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சி இலங்கைத் தீவின் 18வது மிக உயர்ந்த இடமாக உள்ளது.[1]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- Senanayake, Chanaka (2004). Sri Lankawe Diya Eli (in சிங்களம்) (1st ed.). Sooriya Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8892-06-8.
மேற்கோள்கள்
தொகு- ↑ Senanayake 2004: 1