அப்சான் அகமது
அப்சான் அகமது (Afshan Ahmed)(பிறப்பு 22 செப்டம்பர் 1966) என்பவர் பாக்கித்தானிய பாடகி ஆவார். இவர் " தோஸ்தி ஐசா நாதா ", " மேரே பச்பன் கே தின் " மற்றும் பிற தொலைக்காட்சி மற்றும் வானொலி பாடல்களினால் பெயர் பெற்றவர்.
அப்சான் அகமது .Afshan Ahmed | |
---|---|
தாய்மொழியில் பெயர் | افشاں احمد |
பிறப்பு | அப்சான் அகமது பேகம் 22 செப்டம்பர் 1966 லாகூர், பாக்கித்தான் |
மற்ற பெயர்கள் | மேடாமே அப்சான் |
பணி | பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970 – முதல் |
தொலைக்காட்சி | பாக்கித்தான் தொலைக்காட்சி |
பெற்றோர் | அசுமா அகமது (அம்மா) |
இளமை
தொகுஅப்சானின் குடும்பம் 1965-ல் இந்தியாவிலிருந்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தது. இவரது தாயார் அஸ்மா அகமது அனைத்திந்திய வானொலியில் பாடகியாக இருந்தார். 1970களில், அஸ்மா திரைப்படங்களில் பின்னணி பாடினார். பாடகர் அக்லக் அகமதுவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.[1] அப்சான் சிறு வயதிலேயே குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "ஹமாரி ஷாம் "-ல் பாடத் தொடங்கினார்.[2] பின்னர் இசைக்கலைஞர் சோஹைல் ராணாவின் குழந்தைகளுக்கான கலியோன் கி மாலா மற்றும் ஹம் சூரஜ் சந்த் சிதாரே நிகழ்ச்சிகளில் சேர்ந்தார். "தோஸ்தி ஐசா நாதா " என்ற பாடலைப் பாடியதற்காகப் பாராட்டப்பட்டார்.[2]
தொழில்
தொகுபின்னர், அப்சன் அகமது 1980கள் மற்றும் 1990களில் பாக்கித்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்கள் பல பாடியுள்ளார். இதில் பிரபலமான திருமணப் பாடலான " பாபுலா வே லே ஜெய்ன் நா லோக் முஜ்க் கோ " உட்பட. அவர் பினாகா பற்பசை விளம்பரத்திலும் தோன்றினார். [2] [3] [4]
அப்சான் 2016-ல் குழந்தைகள் இலக்கிய விழாவில் பாடியுள்ளார். மேலும் இவர் காவோ மேரே சங், ஜீவி, ஜீவி பாக்கித்தான், யே தேஸ் ஹமாரா ஹை மற்றும் குழந்தைகளின் விருப்பப்படலான தோஸ்தி ஐசா நாதா ஜோ சோனே சே பி மெஹங்கா பாடலைப் பாடினார்.[5]
2018ஆம் ஆண்டு குடிமக்கள் அறக்கட்டளை நடத்திய ஒபார்தே சிதாரே (Obhartay Sitaray) போட்டியில் நடுவராக இருந்தார்.[6][7][8]
2019ஆம் ஆண்டு சூலை 23ஆம் தேதி, பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற எமி நிகழ்வில் கலந்துகொண்டார். நிசார் பாசுமியின் நினைவாக, பாடகர் தன்வீர் அப்ரிடி மற்றும் எமி பாக்கித்தானின் மக்கள் தொடர்பு இயக்குநரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.[9]
2019ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பிளாட்டிசு உணவகத்தில் இசுரார் உசைன் ஏற்பாடு செய்திருந்த பாக்கித்தான் திரைப்படம் மற்றும் கலை விருது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[10]
2022ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி, கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்கச் சிந்துவின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அறக்கட்டளை நிதி விழாவில் பங்கேற்றார். [11] [12]
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகுஆண்டு | தலைப்பு | தொலைக்காட்சி |
---|---|---|
1975 | கலியோன் கி மாலா | பாக்கித்தான் தொலைக்காட்சி |
1983 | சில்வர் ஜூப்ளி (வெள்ளி விழா) | பாக்கித்தான் தொலைக்காட்சி |
1993 | எஸ் சார், நோ சார் (ஆமாம் சார், இல்லை சார்) | பாக்கித்தான் தொலைக்காட்சி |
2000 | ஏரியல் தாய்மார்கள் | பாக்கித்தான் தொலைக்காட்சி |
பிரபலமான பாடல்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "گلوکار اخلاق احمد کے امرگیت". The Express News. May 20, 2022.
- ↑ 2.0 2.1 2.2 Hyder, Khursheed (May 19, 2008). "A taste of vintage music". Dawn. https://www.dawn.com/news/303357/karachi-a-taste-of-vintage-music.Hyder, Khursheed (May 19, 2008). "A taste of vintage music". Dawn.
- ↑ "Legendary singer Afshan Ahmad graces ARY News’ Independence day show". ARY News. August 14, 2018. https://arynews.tv/afshan-ahmad-ary-news-independence-day-show/.
- ↑ Mir, Dr. Huma (February 23, 2021). "شوبزنس کے بدلتے انداز". Daily Jang. https://jang.com.pk/news/889464.
- ↑ "Musical skits and plays bring out children's hidden talent". The News International. February 28, 2016.
- ↑ "Obhartay Sitaray returns with a treat of young, soulful voices". The News International. November 25, 2018.
- ↑ "Young singers to perform at TCF's Obhartay Sitaray contest". The News International. January 18, 2018.
- ↑ "A galaxy of budding stars showcase their vocal talent". The News International. March 3, 2018.
- ↑ "نثاربزمی کی رائیلٹی کا چیک فرزندسید افتخار احمدکے حوالے". Daily Pakistan. July 23, 2019.
- ↑ "مقامی ہوٹل میں فیشن شو آج منعقد ہوگا". Daily Pakistan. November 28, 2019.
- ↑ "نایاب کتابیں چھپوانے کیلئے 86 منصوبوں پر کام کررہے ہیں، جہانگیرصدیقی". Jang News. November 15, 2022.
- ↑ "Preserving heritage a collective job: Siddiqui". The News International. November 15, 2022.
- ↑ "دوستی کیسا ناتا؟ (عالمی یومِ دوستی پر ایک تحریر)". ARY News. 30 July 2021. https://urdu.arynews.tv/world-friendship-day-2021/.
- ↑ "گلوکار عالمگیر". Nawa-i-waqt. June 26, 2022.