அப்துல் கனி மாலிக்கு

இந்திய அரசியல்வாதி

அப்துல் கனி மாலிக்கு (Abdul Ghani Malik) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியில் உறுப்பினராக இவர் இருந்தார். அப்துல் கனி மாலிக்கு உதம்பூர் மாவட்டத்தின் குலாப்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சம்மு காசுமீர் சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் 1996 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2002 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று மும்முறை வெற்றி சாதனை படைத்தார். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தனது நெருங்கிய போட்டியாளரான சுயேச்சை வேட்பாளர் மும்தாச்சு அகமதுவை தோற்கடித்தார். மாலிக் 14268 வாக்குகளையும், அகமது 11020 வாக்குகளையும் பெற்றனர். 2009 ஆம் ஆண்டு உமர் அப்துல்லா தலைமையிலான அரசாங்கத்தில் உயர் கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைகளுடன் அமைச்சரானார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கனி_மாலிக்கு&oldid=4090558" இலிருந்து மீள்விக்கப்பட்டது