டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது
(அப்துல் கலாம் விருது (தமிழ்நாடு அரசு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது (Dr APJ Abdul Kalam Award) என்பது, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட விருதாகும். இவ்விருது அமைக்கப்பட்ட செய்தியினை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, ஜூலை 31, 2015 அன்று வெளியிட்டார்.[1][2] அத்துடன் அப்துல்கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15 ஆம் திகதியானது, தமிழ் நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக (Youth Awakening Day) கடைப்பிடிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்தார்.[3][4] இவ்விருதாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் (8 கிராம்) வழங்கப்படும்.[5][6]
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது | |
---|---|
ஓவியம், டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் | |
தேதி | ஆகத்து 15, 2015 |
இடம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | தமிழ்நாடு அரசு |
வெகுமதி(கள்) | அறிவியல் வளர்ச்சி, மனித, மாணவர் நலன் |
முதலில் வழங்கப்பட்டது | 2015 |
விருது பெற்றவர்கள்
தொகு- 2015 - ந. வளர்மதி (இஸ்ரோ திட்ட இயக்குநர்)[7][8][9]
- 2016 - சண்முகம் (மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை அறிவியலாளர்)[10][11]
- 2017 - எஸ். பி. தியாகராஜன் (ஒரு சிறந்த அறிவியலாளர்- சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்)
- 2018 - தக்ஷா குழு (ஆளில்லா விமானம் குறித்த ஆய்வுகள்)
- 2021 - முனைவர் மு. இலட்சுமணன்
- 2022 - ச. இஞ்ஞாசிமுத்து, பூச்சியியல் ஆராய்ச்சியாளர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருவரைத் தேர்வு செய்து ஆண்டு தோறும், இந்திய விடுதலை நாளான 15, ஆகஸ்டு அன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.". தி இந்து (தமிழ் நாளிதழ்). 31 சூலை 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D15-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7485150.ece. பார்த்த நாள்: 12 ஆகத்து 2015.
- ↑ Jayalalithaa Institutes Award in the Name of Abdul Kalam; His Birthday to be Celebrated as Youth Awakening Day
- ↑ "Tamil Nadu government on Friday said an award would be constituted in his name and his birthday would be observed as "Youth Renaissance Day".". Dnaindia. 31 சூலை 2015. http://www.dnaindia.com/india/report-tamil-nadu-government-to-observe-apj-abdul-kalam-s-birthday-as-youth-renaissance-day-2109789. பார்த்த நாள்: 12 ஆகத்து 2015.
- ↑ "Tamil Nadu chief minister J Jayalalithaa on Friday announced that an award named after late President Dr APJ Abdul Kalam would be given away to an individual in recognition of his or her contribution in scientific development, humanities and students' welfare.". Times of India. 31 சூலை 2015. http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-to-institute-award-in-memory-of-Abdul-Kalam-celebrate-his-birth-anniversary-as-Youth-Awakening-Day/articleshow/48294006.cms. பார்த்த நாள்: 12 ஆகத்து 2015.
- ↑ கலாம் நினைவைப் போற்றும் வகையில் அப்துல் கலாம் விருது: தமிழக அரசு அறிவிப்பு
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1308164
- ↑ இஸ்ரோ திட்ட இயக்குநருக்கு அப்துல்கலாம் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்
- ↑ "69வது சுதந்திர தினவிழா: விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல்கலாம் விருது - ஜெயலலிதா வழங்கினார்". Archived from the original on 2015-08-17. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
- ↑ "Tamil Nadu CM Jayalalithaa awards heavy cargo woman truck driver, ISRO scientist". The Economic Times. 15 August 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
- ↑ Shanmugam Received Kalam Award
- ↑ "70 ஆவது சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா விருது". தினமலர். 16 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2016.[தொடர்பிழந்த இணைப்பு]