அப்பாத் இப்னு பிஷ்ர்
அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி)( அரபு மொழி: عباد بن بشر ) (c.597 – 632)இறைத்தூதர் முஹம்மது நபியின் தோழர்களில் ஒருவராவார். போர் திறன் மற்றும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கியவராக அறிப்படுகிறார்[1][2][3]
நபித்தோழர்களில் ஒருவரான முசாப் இப்னு உமர் அவர்களின் குர்ஆன் ஓதுவதை கண்டு தன் பதிணெட்டாம் அகவையில் ஈர்க்கப்பட்டார்.குர்ஆன் அழகிய முறையில் ஓதுவதில் மிகவும் பிரபலமானவர் ஆகவே குர்ஆனின் நண்பர் என நபித்தோழர்களிடையே அறியப்பட்டார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா பின்த் அபி பக்ர் ஒருமுறை கூறினார்: "அன்சாரிகளில் மூன்று நபர்கள் இருக்கிறார்கள், அவர்கள் போன்று யாரும் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்க முடியாது: சாத் இப்னு முஆத், உசய்த் இப்னு குதைய்ர் மற்றும் அப்பாத் இப்னு பிஷ்ர்."
வாழ்க்கை
தொகுகிபி 625( ஹிஜ்ரி 4)ம் ஆண்டு இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் இன்றைய சௌதி அரேபியாவின் நஜ்த் பள்ளத்தாக்கு பகுதியில் முகாமிட்டிருந்த போது எதிரிகள் தாக்கும் அபாயம் இருப்பதால் சக தோழரான அம்மார் பின் யாசிர் அவருடன் தாமாக முன்வந்து இரவில் காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அபோது அம்மார் பின் யாசிர் அவர்கள் சற்று அயற்சியாக இருந்ததை உணர்ந்து ஒருவர் முதல் பாதியிலும் மற்றவர் இரண்டாம் பாதியிலும் பாதுகாப்பு பணி செய்வது என முடிவு செய்து முதலில் அப்பாத்(ரலி) அவர்கள் முதலில் ஈடுபட்டார் அச்சமயம் வெருமனே நிற்பதற்கு பதிலாக அமைதியான சூழலில், நட்சத்திரங்கள், மரங்கள், பாறைகள் அனைத்தும் அல்லாஹ்வை துதிப்பது போல தானும் இறைவனை வனங்க தொழுகையில் ஈடுபட்டு குர்ஆனை ஓத ஆரம்பித்தார். குர் ஆனோடோடு நெருங்கிய நேசம் கொண்டமையால் எதிரி அம்பை தனது உடலில் எய்திய போதும் சற்றும் தொய்வில்லாமல் தொழுகையை தொடர்ந்தார்.மூன்று அம்புகள் பாய்ந்த பின்னர் இயலாமையால் சக தோழரை எழுப்பினார்.எதிரி தப்பியோட பின்னாளில் அப்பாத்(ரலி) அவர்கள் வணக்க வழிபாடுகளில் மூழ்கியிருந்தல், கட்டற்ற வீரம், இறை பாதையில் கணக்கின்றி செலவு செய்தல் போன்றவற்றிக்காக நினைவு கூறப்படுபவராக இருந்தார்.
இறப்பு
தொகுகிபி 632 இல் யமாமா(சவுதி அரேபியா) போரில் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Muir 1858, ப. ccxxx.
- ↑ Waqidi 2011
- ↑ Salabi 2021, ப. 395