அப்பாலும் அடிசார்ந்தார்

அப்பாலும் அடிசார்ந்தார் என்போர் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.[1] இவர்களை தொகை அடியார்கள் எனும் பிரிவின் கீழ் சைவர்கள் குறிப்பிடுகிறார்கள். சிவனடி பற்றி வாழ்ந்த வாழ்கின்ற வாழப்போகின்ற அடியார்கள் அத்தனை மக்களையும் இவ்வாக்கியம் குறிக்கிறது.

அப்பாலும் அடிசார்ந்தார் - அப்பாலும் என்றால் தொலைவு என்று பொருளாகும். அடிசார்ந்தார் - எனும் குறிப்பு இறைவனின் அடியைப் பற்றியவர்கள் என்பதைக் குறிப்பதாகும். இறைவனின் அடியைப் பற்றிய தொலைவில் உள்ள சைவர்கள் என்று இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=104