அப்புக்குட்டி பொதுவள்

இந்திய இசைக்கலைஞர்

கலாமண்டலம் அப்புக்குட்டி பொதுவள் (Kalamandalam Appukutty Poduval) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மத்தளக் கலைஞர் ஆவார். இசைப் பாடல்கள் இயற்றுபவராகப் புகழ் அடைந்தார். இசைக்கருவியின் அழகியல் கொட்டுகளால் பிரபலமடைந்தார் - இந்த இசைக் கொட்டுகள் தென்னிந்தியாவில் கேரளாவின் பாரம்பரிய நடன நாடகமான கதகளிக்கு ஒரு முக்கிய தாள துணையாகும். பழம்பெரும் வெங்கிச்சன் சுவாமியின் சீடரான இவர், செந்தழகர் கலாமண்டலம் கிருட்டிணன்குட்டி பொதுவளுடன் இணைந்து, அவர்களின் கலைநிகழ்ச்சியின் ஒலியியலில் புதிய முறைகளை ஏற்படுத்தினார். [1]

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான திருவில்வமலை அப்புக்குட்டியின் சொந்த ஊராகும். திருவில்வல வெங்கிச்சன் சுவாமியிடம் மத்தளம் கற்றுக் கொண்டார். அப்புக்குட்டி தனது தாயக கல்வி நிலையமான கேரள கலாமண்டலத்தில் மத்தள ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். இக்கல்லூரியில் பயின்ற பாலூர் அச்சுதன் நாயர், கலாமண்டலம் நாராயணன் நம்பீசன் (நம்பீசன் குட்டி), தாமோதரன் நாயர், ஈச்சர வாரியர், நெல்லுவாய நாராயணன் நாயர், கலாமண்டலம் சங்கர வாரியர், கப்லிங்கட்டு வாசுதேவன் நம்பூதிரி, இராமதாசு மற்றும் சசி ஆகியோர் இவரது குறிப்பிடத்தக்க சீடர்கள் ஆவர்.

அப்புக்குட்டி பொதுவள் 1986 ஆம் ஆண்டில் கலாமண்டலத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் இவர் ஓட்டப்பாலத்திற்கு கிழக்கே உள்ள சதானம் கதகளி அகாடமியில் ( காந்தி சேவா சதன் ) வருகை தரும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 2000 ஆம் ஆண்டில் இவர் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் [2]

அப்புக்குட்டி பொதுவள் 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் தேதியன்று தன்னுடைய 84 ஆவது வயதில் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து இறந்தார் [3]

மேற்கோள்கள் தொகு

  1. Kathakali Vijnanakosam (encyclopedia), page 305
  2. "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
  3. "Archive News". The Hindu. 2008-01-28. Archived from the original on 2008-02-10. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்புக்குட்டி_பொதுவள்&oldid=3671047" இலிருந்து மீள்விக்கப்பட்டது