அப்பூச்சி காட்டுதல்

அப்பூச்சி காட்டுதல் என்பது குழந்தை விளையாட்டுகளில் ஒன்று. சின்னக் குழந்தை கண்ணன் தன் நிழலைக் காட்டி அதனைப் பிடித்துத் தா என அடம் பிடிப்பது போலப் பாவனை செய்துகொண்டு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்.[1] பெரியாழ்வார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது காலத்தில் இதுபோன்றதொரு விளையாட்டு தமிழரிடையே பழக்கத்தில் இருந்திருக்கிறது.

பிற்காலத்தில் குழந்தைகளுக்கு அதன் நிழலைக் காட்டிப் பூதம் எனக் கூறிப் பயமுறுத்தலாயினர்.

பெரியாழ்வார் பாடல்

தொகு
மெச்சூது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்,
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான், அம்மானே
அப்பூச்சி காட்டுகின்றான்.

பார்க்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம்பத்து - மெச்சூது
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பூச்சி_காட்டுதல்&oldid=968746" இலிருந்து மீள்விக்கப்பட்டது