அமராந்து எண்ணெய்

அமராந்து எண்ணெய் (Amaranth oil) என்பது அமராந்தசு – ஏ. குருயெண்டசு மற்றும் ஏ. ஐப்போகாண்டிரியாகசு என்ற இரண்டு இனங்களின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் ஆகும். அறைக்கீரை எண்ணெய் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மேற்கண்ட இவ்விரண்டு இனங்களின் விதையைப் பொதுவாக அமராந்து தானியம் என்ற பெயரால் அழைப்பர். ஒலியிக் அமிலம், லினோலெயிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்ற அமிலங்கள் கொண்ட கொழுப்பு அமிலங்களுக்கு இது ஓர் ஆதார மூலமாகக் கருதப்படுகிறது [1]. உயர் மற்றும் தாழ் வெப்பநிலை இரண்டிலும் வெப்ப நிலைப்படுத்தியாக பயன்படும் தன்மை இதற்கு உண்டு. வணிகரீதியாக அமராந்து எண்ணெய் பல்வேறு பயன்பாடுகளை அளிக்கிறது.

அமராந்து குருயெந்தசு

ஓர் உணவு எண்ணெய் என்ற வகையில் அமராந்து எண்ணெய் மிகநுண்ணிய சுவையைக் கொண்டது. அமராந்து தானியத்தின் எண்ணெய் அளவு சதவீதம் 4.8 முதல் 8.1 சதவீதம் ஆகும். மற்ற விதை எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் இச்சதவீத அளவு குறைவானதாகும் [2].

அமராந்து எண்ணெயின் வேதி இயைபு: -

கொழுப்பு அமிலம் இயைபு
லினோலெயிக் அமிலம் 50%
ஒலியிக் அமிலம் 23%
பால்மிடிக் அமிலம் 19%
சிடீயரிக் அமிலம் 3%

சான்றுகள் தொகு

  1. Martirosyan, D. M; Miroshnichenko, L. A; Kulakova, S. N; Pogojeva, A. V; Zoloedov, V. I (2007). "Amaranth oil application for coronary heart disease and hypertension". Lipids in Health and Disease 6: 1. doi:10.1186/1476-511X-6-1. பப்மெட்:17207282. 
  2. Budin, J.T.; Breene, W.M.; Putman, D.H (1996). "Some compositional properties of seed oils of eight Amaranth species". Journal of the American Oil Chemists' Society 73 (4): 475–481. doi:10.1007/BF02523922. https://archive.org/details/sim_jaocs-journal-of-the-american-oil-chemists-society_1996-04_73_4/page/475.  Cited in Interactive European Network for Industrial Crops and their Applications: Amaranth
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராந்து_எண்ணெய்&oldid=3520477" இலிருந்து மீள்விக்கப்பட்டது