அமர்நாத் துயரச்சம்பவம் 1996

1996 அமர்நாத் துயரச்சம்பவம் ( 1996 Amarnath Yatra tragedy) என்பது 250 புனிதப் பயணிகளை பலிகொண்ட ஒரு துயரச்சம்பவமாகும். இச்சம்பவம் இந்திய நாட்டிலுள்ள சம்மு காசுமீரில் 1996 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. புனிதப் பயணிகளின் அமர்நாத் யாத்திரை செல்லும் ஆண்டுப் புனிதப்பயணத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது.[1] [2]

A Picture of pilgrims on route.
அமர்நாத் புனிதப்பயணத்திற்கு செல்லும் பக்தர்களின் வழி

சண்டை அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் 1991 முதல் 1995 வரையிலான காலத்திற்கு அமர்நாத் யாத்திரையை தடை செய்து வைத்திருந்தது. 1996 இல் புனித யாத்திரையில் தாங்கள் தலையிடுவதில்லை என்று போராளிகள் உறுதிமொழி கொடுத்ததைத் தொடர்ந்து யாத்திரை அனுமதிக்கப்பட்டு வழக்கத்தைவிட அதிகமான பயனிகள் யாத்திரையில் பங்கேற்றனர். 1996 ஆகத்து 21 மற்றும் 25 நாட்களுக்கு இடையில் மட்டும் சுமார் 1,00,000 யாத்திரிகர்கள் சம்முவுக்கும் அமர்நாத்துக்கும் இடையில் மேலே சென்று கொண்டோ கீழே இறங்கிக் கொண்டோ இருந்தார்கள். வழக்கமாக ஆகத்து மாதக் காலத்தில் யாத்திரிகை செல்லும் பாதையில் அதிகமான பனிப்புயலுடன் கூடிய பனிப்பொழிவு இருக்கும். கிட்டத்தட்ட 242 ஆன்மீகப் பயணிகள் இந்தப் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கத்தால் உறைந்து இறந்தார்கள்.

அரசாங்கம் தேசிய மாநாட்டுக் குழு ஒன்றை இந்தியக் குடிமைப் பணி அலுவலரான டாக்டர் நித்திசு சென்குப்தா தலைமையில் அமைத்தது. இத்துயரச் சம்பவம் குறித்து விசாரனை செய்து காரணங்கள் மற்றும் தீர்வுகளை அறிக்கையாகச் சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டது. எதிர்வரும் காலத்தில் இவ்வாறான துயரச் சம்பவங்களில் இருந்து தப்பிக்க இவ்வறிக்கை உதவும் என்றும் அரசாங்கம் கருதியது[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rediff On The NeT: Harkatul Mujaheedin 'bans' Amarnath Yatra". Rediff.com. 1998-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-22.
  3. "The Sunday Tribune - Spectrum - Travel". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.