அமலனாதிபிரான்
தமிழ் வைணவ இலக்கிய படைப்பு
அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும்.[1] 10 தனியன்களைக் கொண்டது, திருவரங்கத்துத் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்நூல், திருப்பாணாழ்வார் அழகிய மணவாளனது திருமேனி அழகில் மெய்மறந்து பாடியருளியதாகக் கூறப்படுகிறது. அரங்கன் மீது பாடப்பட்ட இப்பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறது.[2]
மேற்கோள்
தொகு- ↑ எஸ்.ஜயலக்ஷ்மி (2008-09-11). "திருப்பாணாழ்வார்". தமிழ்ஹிந்து (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
- ↑ "வைணவ இலக்கியங்கள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.