அமினால் அல்லது அமினோ அசிட்டால் (Aminal or Aminoacetal) என்பது ஒரு வேதி வினைக்குழுவாகும். இவ்வகைச் கரிமச் சேர்மங்களில் இரண்டு அமீன் குழுக்கள் ஒரே கார்பன் அணுவுடன் C(NR2)(NR2)- என இணைந்திருக்கும். இவ்வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள R ஓர் ஐதரசன் குழு அல்லது ஓர் ஆல்க்கைல் குழுவைக் குறிக்கும் [1]. அமினால் மற்றும் எமியமினால் குழுக்கள் நைட்ரசன் ஆக்சிசனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட அசிட்டால்கள் மற்றும் எமியசிட்டால்கள் குழுக்களை ஒத்த சேர்மங்களாகும். பிசர் இண்டோல் தொகுப்பு வினையில் அமினால்கள் தோன்றுகின்றன. வளைய அமினால்களும் நன்கு அறியப்படுகின்றன. டையமீன் மற்றும் ஆல்டிகைடு ஆகியவற்றை ஒடுக்கம் செய்வதால் இவை உண்டாகின்றன [2].

அமினால் பொது அமைப்பு

எமியமினால் ஈதர்கள்

தொகு
 
ஆல்டிகைடிலிருந்து வருவிக்கப்பட்ட எமியமினால்
 
கீட்டோனிலிருந்து வருவிக்கப்பட்ட எமியமினால்

எமியமினால் ஈதர்களும் சிலசமயங்களில் அமினால்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஐயுபிஏசி இதை ஆதரிப்பதில்லை. R‴-C(NR'2)(OR")-R⁗ என்ற மூலக்கூறு கட்டமைப்பில் இவை அமைகின்றன. கிளைக்கோசிலமீன்கள் வளைய எமியமினால் ஈதர்களுக்கு உதாரணமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "aminals". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Hiersemann, M. "Functions bearing two nitrogens" in Comprehensive Organic Functional Group Transformations II 2005, volume 4, 411-441. Edited by Katritzky, Alan R.; Taylor, Richard J. K. எஆசு:10.1016/B0-08-044655-8/00075-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினால்&oldid=2543947" இலிருந்து மீள்விக்கப்பட்டது