அமியா தாகூர்

அமியா தாகூர் (Amiya Tagore) (ராய்) (1908 பிப்ரவரி 12 - 1986 நவம்பர் 13) இவர் ஓர் பெங்காலி ரவீந்திர சங்கீதப் பாடகராவார். [1] இரவீந்திரநாத் தாகூரிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொண்ட சில பாடகர்களில் இவரும் ஒருவர். இவர் தாகூரின் மாயர் கேளா என்ற நாட்டிய நாடகத்தில் பிரமாதா என்ற பாத்திரத்தில் நடித்தும் இசையமைத்தும் மற்றும் இயக்கியுமிருந்தார். பின்னர் இவர் தாகூரின் மூத்த சகோதரரின் பேரனுடன் திருமணம் செய்து கொண்டதன் மூலம் தாகூர் குடும்பத்தில் உறுப்பினரானார்.

அமியா தாகூர்
பிறப்பு(1908-02-12)12 பெப்ரவரி 1908
கொல்கத்தா
இறப்பு(1986-11-13)13 நவம்பர் 1986
இசை வடிவங்கள்ரவீந்திர சங்கீதம்
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

வழக்கறிஞர் சுரேந்திரநாத் ராயின் மகளான, இவர் 1908 பிப்ரவரி 12, அன்று கொல்கத்தாவில் பிறந்தார். மேலும் பெதுன் பள்ளி மற்றும் பெதுன் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் ஒரு இசுலாமியரிடமிருந்து இசையில் ஆரம்பகால பயிற்சியினைப் பெற்றார். அமியா கவிஞரிடமிருந்து நேரடியாக இரவீந்திர சங்கீதத்தைக் கற்றுக்கொண்டார். இவருக்கு ஒரு மென்மையான குரல் இருந்தது. கவிஞர் இவருக்கு மிகவும் கடினமான தாளங்களை கற்பித்தார். இவர் கிருதிந்திரநாத் தாகூரை மணந்தார். [2]

பிற்கால வாழ்வு தொகு

அமியா தாகூர் தனது திருமணத்திற்குப் பிறகு தாகூரின் பிறந்தநாளில் மட்டுமே பொது நிகழ்ச்சிகளை தோன்றினார். சத்யஜித் ராயின் கஞ்சன்யங்கா (1962) என்றப் படத்தில் 'ஈ பராபேஸ் ரபே கே ஹே' என்றப் பாடலைப் பாடினார். தனது வாழ்க்கையின் முடிவில், 1979 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள கலாச்சார மையமான இரவீந்திர சதானில் பாடல்களை பாடியதன் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார்.

குறிப்புகள் தொகு

  1. Ghosh, p. 109
  2. Bose, Anjali (editor), 2004, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol 2, (in வங்காள மொழி), p 22, ISBN 81-86806-98-9 (set) and ISBN 81-86806-99-7 (Vol 2).

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமியா_தாகூர்&oldid=2992258" இலிருந்து மீள்விக்கப்பட்டது