அமி பார் மிளினார்

அமெரிக்கக் கோளியலாளர், புவி இயற்பியலாளர்

அமி பார் மிளினார் (Amy Barr Mlinar) ஓர் அமெரிக்கப் புவியியற்பியலாளர் ஆவார். இவர் பனிக்கட்டி வான்பொருள் உருவாக்க ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர் ஆவார். இவர் தேசியக் கல்விக்கழகங்களின் வானுயிரியல், கோள் அறிவியல் சார்ந்த நிலைக்குழுவின் உறுப்பினர் ஆவார். இவர் நாசாவின் ஐரோப்பா நிலா படம்பிடிப்பு அமைப்புக்கும் இரீசன் (REASON) கருவிகளுக்கும் இணை ஆய்வாளராக உள்ளார்.[1][2][3][4]

இளமையும் கல்வியும்

தொகு

அமி பார் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்ட்டோவில் பிறந்தார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் இளவல் பட்டத்தைக் கோள் அறிவியலில் 2000 இல் பெற்றார். இவர் தன் பட்டமேற்படிப்பைகொலராடோ பவுல்டர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு 2002 இல் முதுவர் பட்ட்த்தையும் 2004 இல் முனைவர் பட்ட்த்தையும் பெற்றார்.[1][2]

வாழ்க்கையும் ஆய்வும்

தொகு

இவர் 2005 இல் புனித உலூயிசு வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகச் சேர்ந்தார். பிறகு 2006 இல் சவுத்வெசுட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்று 2011 வரை அங்கிருந்தார். பிறகு இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர், 2015 இல் கோள் அறிவியல் நிறுவனத்துக்குச் சென்றார். அங்கு இவர் 2016 இல் இருந்து முதுநிலை அறிவியலாளராக உள்ளார். இவரது ஆய்வு காலிசுட்டொ நிலாவின் தோற்ரத்தையும் என்சிலாடசின் நிலநடுக்க்ச் செயல்பாட்டையும் பிந்தைய அடர்மொத்தலையும் உள்ளடக்குகிறது.[1][2]

வெளியீடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Dr. Amy C. Barr Mlinar | Planetary Science Institute". www.psi.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.
  2. 2.0 2.1 2.2 "Amy Barr | News from Brown". news.brown.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.
  3. "Planetary Science Institute Researchers to Study Jupiter's Moon Europa | Planetary Science Institute". www.psi.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.
  4. Than, Ker. "Does Icy Pluto Have a Hidden Ocean? New Horizons Offers New Clues". Smithsonian. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமி_பார்_மிளினார்&oldid=3949777" இலிருந்து மீள்விக்கப்பட்டது