அமீர்-உத்-தௌலா பொது நூலகம்

அமீர்-உத்-தௌலா பொது நூலகம் (Amir-ud-daula Public Library) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில தலைநகரம் லக்னோவில் உள்ளது. [2][3]

அமீர்-உத்-தௌலா பொது நூலகம்
Amir-ud-daula Public Library
अमीर-उद-दौला पब्लिक लाइब्रेरी
امیر الدولہ پبلک لائبریری
வகைபொது நூலகம்
Public library
தொடக்கம்1868
அமைவிடம்இலக்னோ [1]
Collection
Items collectedஅச்சிடப்பட்டவை,வரைபடங்கள்,ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள், கல்வெட்டுகள்
Access and use
Access requirementsபொது நூலகம்
ஏனைய தகவல்கள்
இயக்குநர்அர்ச்சணா காரே
பணியாளர்கள்13
இணையதளம்amirplibrary.org
Map
Map

வரலாறு

தொகு

லக்னோவின் வெவ்வேறு இடங்களில் நூலகத்திற்கு என நீண்ட வரலாறு உண்டு. 1882 ஆம் ஆண்டில் இது லக்னோவின் மாநில அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தது, பின்னர் மாகாண அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது, மேலும் 1887 ஆம் ஆண்டில் மாணவ வாசகர்களுக்காகத் திறக்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டில் நவாப் சதாத் அலிகான் (1798-1814) என்பவரால் கட்டப்பட்ட லால் பரதரி கட்டிடத்தின் மேல் மாடிக்கு மாற்றப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் நூலகம் சோட்டா சத்தர் மன்சிலுக்கு மாற்றப்பட்டு லக்னோவின் பொது நூலகமாக திறக்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் நூலகம் மீண்டும் vஏஉ இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை நூலக நோக்கத்திற்காக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்குதான் மாறியது. .

1921 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியாளரான சர் ஆர்கோர்ட்டு பட்லர் நூலகத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்த நூலகம் ஐக்கிய மாகாண அரசாங்கத்திற்கு அவாத்தின் தாலுக்தார்களால் பரிசளிக்கப்பட்டது. முகமது அமீர் அசன் கான் பெயர் நூலகத்திற்கு வைக்கப்பட்டது. அசன் கானுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பட்டப்பெயர்களில் ஒன்றுதான் அமீர்-உத்-தௌலா என்பதும் என்று அறியப்படுகிறது. 1947 ஆம் ஆண்டில், தாலுக்தார் சங்கம் ஒரு பூங்காவை நிர்மாணிப்பதற்காக நூலகத்தின் முன் சிறிது நிலத்தை வழங்கியது. [4] அமீர்-உத்-தௌலா பொது நூலகத்தில் இந்தி, ஆங்கிலம், உருது, அரபு, பாரசீகம் பெங்காலி மற்றும் சமசுகிருதம் உள்ளிட்ட மொழிகள் பலவற்றில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Overview of Amir-ud-Daula Public Library". maps.google.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2013.
  2. Llewellyn-Jones, Rosie (2003). Lucknow : then and now. London: Sangam. pp. 86, 89, 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185026610.
  3. Punjab Library Association (1943). Modern Librarian, Volumes 14-15. Pakistan Library Association. p. 28.
  4. Llewellyn-Jones, Rosie (2003). Lucknow : then and now. London: Sangam. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185026610.