அமெரிக்க இலித்தியம் நிறுவனம்

அமெரிக்க இலித்தியம் நிறுவனம் (Lithium Corporation of America) என்பது இலித்தியம் வெட்டியெடுக்கும் ஒரு சுரங்க நிறுவனமாகும்.[1][2]

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்திலுள்ள பெசெமர் நகரம், காசுடன் மாகாணம், மற்றும் தெற்கு தகோட்டா மாநிலத்தின் பிளாக் இல்சு மலைத்தொடர் ஆகிய பகுதிகளுக்கு அருகில் சிபாடுமின் மற்றும் பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறை தாதுக்களை இந்நிறுவனம் வெட்டியது. கனடாவின் இலித்தியம் தயாரிப்பாளரான கியூபெக் இலித்தியம் நிறுவனம் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க இலித்தியம் நிறுவனத்தின் மீது ஒப்பந்தத்தை மீறியதற்காக வழக்குத் தொடர்ந்தது. இது கையகப்படுத்தப்பட்ட நேரத்தில், நிறுவனம் உலகின் மிகப்பெரிய இலித்தியம் உற்பத்தியாளராக இருந்தது.[3]

1985 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இலித்தியம் நிறுவனம் உணவு இயந்திரங்கள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. முன்னதாக இந்நிறுவனம் உணவு இயந்திரங்கள் மற்றும் வேதியியல் நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய இலித்தியம் உற்பத்தியாளராக இருந்தது.[4] [5] உணவு இயந்திரங்கள் நிறுவனத்தின் இலித்தியம் செயல்பாடுகள் அனைத்தும் இப்போது உணவு இயந்திரங்கள் நிறுவன இலித்தியம் என்றே அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Ryan, Jack R. (December 12, 1954). "Expansion Pushed in Lithium Output; Use of Lightest Metal Is Now Ten Times Pre-War Rate -Demand Exceeds Supply". The New York Times: p. F1. https://www.nytimes.com/1954/12/12/archives/expansion-pushed-in-lithium-output-use-of-lightest-metal-is-now-ten.html. பார்த்த நாள்: 2009-11-02. 
  2. "LCA Mine (Lithium Corporation of America Mine), Bessemer City, Gaston Co., North Carolina, USA". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2009-11-02.
  3. The New York Times (September 10, 1959). "Lithium Corp. Sued by Quebec Company". pp. 53. https://select.nytimes.com/gst/abstract.html?res=FB0D1EF93E5F1A7B93C2A81782D85F4D8585F9. பார்த்த நாள்: 2009-11-02. 
  4. "FMC History". FMC Corporation. Archived from the original on 2009-07-09. பார்க்கப்பட்ட நாள் 2009-11-02.
  5. Lifton, Jack (September 1, 2006). "Reflections on Investing in the Future of Lithium". Resource Investor. http://www.resourceinvestor.com/News/2006/9/Pages/Reflections-on-Investing-in-the-Future-of-Lithium.aspx. பார்த்த நாள்: 2009-11-02. 

புற இணைப்புகள்

தொகு