அமெரிக்க காமிக் புத்தகம்
அமெரிக்க காமிக்சு புத்தகம் (’’American comic book’’) இன்றளவும் அமெரிக்காவில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருக்கும் வரைகதை வெளியீடு ஆகும். இது மெல்லிய காகிதத்தில் அன்றன்றைய காலகட்டத்திற்கு ஏற்பத் தன் சூழ்நிலை மாற்றங்களை மக்களின் மனஓட்டத்தின் வழிகோலாக அமைந்து புதுப்புது வடிவிலும் வெளிவருகிறது.
1933 காலகட்டத்தில் ஆரம்பமன இப்புத்தகம் 1938 களில் அதிரடி சித்திர தொடராக பிரசுரமானது. சூப்பர்மேன் கதாபாத்திரம் இந்த புத்தகத்தின் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இக்கதாபாத்திரம் இரண்டாம் உலக யுத்தம் வரை தன் ஆதிக்கத்தை கொண்டிருந்தது. இதில் விலங்குகள், வேடிக்கையாக, காதல் மற்றும் நகைசுவை கலந்த கதாபாத்திரங்களை ஏற்று மக்களை மகிழ்விப்பது படிப்போர்க்கு மிகவும் ஆர்வத்தை வளர்க்கும் நிலை கொண்டிருந்தது.
1950ம் ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சி, ஊடகங்களின் போட்டி, பொழுதுபோக்கு அம்சங்களின் அபிவிருத்தியின் காரணமாக காமிக்ஸ் வளர்சியில் பின்னடைவு ஏற்பட்டது. 1960ம் ஆண்டுகளில் இசை வகை சம்பந்தமான மீநாயகர்களால் (superhero) மீண்டும் புத்துயிர் பெற்றது. 20ம் நூற்றாண்டுகளில் பல்பொருள் அங்காடிகளில் முதன்மை காட்சிப்பொருளாக கடையை அலங்கரிக்கிறது. பல மில்லியன் டாலர்கள் இதன் விற்பனையில் கிடைக்கிறது.
வரலாறுதொகு
1897 காலகட்டத்தில் நவீன யுக்திகளின் மூலம் காமிக்ஸ் பலமுகங்கள் காட்டிவளர்ந்தது. 1833ம் ஆண்டு ஓபாடியா ஓல்டுபக் (obadiah oldbuck) மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். நியூயார்க்கில் 1842 வெளிவந்த காமிக்ஸ் மிகவும் மக்களைக் கவர்ந்தது. 1897ல் சி.டபிள்யு. டில்லிங்கம் ( G.W.Dillingham) வெளியிட்ட புத்தகம் மிகவும் பிரபலமானது.
சான்றுகள்தொகு
- காமிக்சு புத்தகங்களின் வரலாறு
- Comic Monthly
- American Treasures of the Library of the congress
- Funnies on Parade
- All in Color for a Dime by Dick Lupoff & Don Thompson ISBN 0-87341-498-5
- The Comic Book Makers by Joe Simon with Jim Simon ISBN 1-887591-35-4
- DC Comics: Sixty Years of the World's Favorite Comic Book Heroes by Les Daniels ISBN 0-8212-2076-4
- The Great Comic Book Heroes by Jules Feiffer ISBN 1-56097-501-6
- Marvel: Five Fabulous Decades of the World's Greatest Comics by Les Daniels ISBN 0-8109-3821-9
- Masters of Imagination: The Comic Book Artists Hall of Fame by Mike Benton ISBN 0-87833-859-4
- The Official Overstreet Comic Book Price Guide by Robert Overstreet—Edition #35 ISBN 0-375-72107-X
- The Steranko History of Comics, Vol. 1 & 2, by James Steranko—Vol. 1 ISBN 0-517-50188-0