அமெரிக்க செயற்கை உள் உறுப்புகள் சங்கம்
அமெரிக்க செயற்கை உள் உறுப்புகள் சங்கம் (American Society for Artificial Internal Organs) என்பது என்பது செயற்கை உள் உறுப்புகள் மற்றும் அவற்றின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களின் ஓர் அமைப்பாகும்.[1]
செயற்கை உள் உறுப்புகள் பற்றிய ஆராய்ச்சியை இச்சங்கம் ஆதரிக்கிறது. ஓவ்வோர் ஆண்டும் சங்கத்தின் கூட்டத்தை நடத்துகிறது. இக்கூட்டம் தொழில்துறை, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை ஈர்க்கிறது.[2]
சிறுநீரகவியல், இதய நுரையீரல் சாதனங்கள் (செயற்கை இதயங்கள், இதய நுரையீரல் இயந்திரங்கள்) மற்றும் உயிரியல் பொருட்கள் ஆகிய உறுப்புகளை செயற்கையாக உருவாக்குவதில் அமெரிக்க செயற்கை உள் உறுப்புகள் சங்கம் மிகவும் அதிகமாக முன்னெடுக்கிறது. அமெரிக்க செயற்கை உள் உறுப்புகள் சங்க செய்தி இதழ் ஒன்றையும் ஆண்டுக்கு 10 இதழ்களை இச்சங்கம் வெளியிடுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ASAIO - American Society for Artificial Internal Organs". asaio.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
- ↑ ASAIO - 66th Annual Conference
- ↑ "About the Journal". journals.lww.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.