அமேடிக் விரிகுடா

அமேடிக் விரிகுடா (Amatique bay) கரிபியக் கடலில் உள்ள ஹோண்டுராஸ் வளைகுடாவின் உட்பகுதியாகும். இது வட கிழக்கிலுள்ள குவாத்தமாலாவிற்கும், தென்கிழக்கில் உள்ள பெலீசுக்கும் இடையில் அடங்குகிறது. இது குவாத்தமாலாவிலுள்ள சாண்டோ தோமாஸ் (காஸ்டில்லோ) இடத்திலிருந்து வடமேற்காக 64 கி.மீ. வரையிலும் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக 24 கி.மீ வரையிலும் பரவியுள்ளது. இவ்விரிகுடாவில் ரியோடல்ஸ், சர்ஸ்டூன், மோஹே ஆகிய ஆறுகள் கலக்கின்றன. போர்டோ பேரியோஸ் சான்டோ தோமாஸ் (காஸ்டில்லோ), லிவிங்ஸ்டன், புன்டா கோர்டா ஆகியவை இவ்விரிகுடாவின் முக்கிய துறைமுகங்களாகும்.[1][2]

அமேடிக் விரிகுடாவை விண்வெளியில் இருந்து இருந்து காணும் தோற்றம்

ஆக்குநர்சுட்டு

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. "Planned gas terminal". Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2011-07-25.
  2. "Amatique Bay". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேடிக்_விரிகுடா&oldid=4116205" இலிருந்து மீள்விக்கப்பட்டது