அமைடோ அமீன்
அமைடோ அமீன்கள் (Amidoamines) என்பவை கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஈரமீன்கள் சேர்ந்து உருவாகும் வேதிச்சேர்மங்கள் ஆகும். கோக்கமிடோபுரொபைல் பெட்டாயின் போன்ற மேற்பரப்புச் செயலிகள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் இடைநிலையாக இச்சேர்மம் உருவாகிறது. இவற்றுள் சிலசேர்மங்கள் உடல் பாதுகாப்புப் பொதுகாப்புப் பொருட்களான சவுக்காரம், முடிக்கழுவிகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுகின்றன. இப்பாக்சி பிசின்களை பதப்படுத்தும் பொருள்களாக அமைடோ அமீன்கள் செயல்படுகின்றன.
கோக்கமிடோபுரொபைல் பெட்டாயினைப் பகுதிப்பொருளாக கொண்ட சேர்மங்களின் ஒவ்வாமை வினைகளுக்கு அமைடோ அமீன்கள் காரணம் என்று திட்டுச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fowler JF, Fowler LM, Hunter JE (1997). "Allergy to cocamidopropyl betaine may be due to amidoamine: a patch test and product use test study". Contact Dermatitis 37 (6): 276–81. doi:10.1111/j.1600-0536.1997.tb02464.x. பப்மெட்:9455630.
- ↑ Foti C, Bonamonte D, Mascolo G, Corcelli A, Lobasso S, Rigano L, Angelini G (2003). "The role of 3-dimethylaminopropylamine and amidoamine in contact allergy to cocamidopropylbetaine". Contact Dermatitis 48 (4): 194–198. doi:10.1034/j.1600-0536.2003.00078.x. பப்மெட்:12786723. http://www.biologia.uniba.it/fisiologia/corcelli/en/pdf/contact%20dermatitis.pdf. பார்த்த நாள்: 2015-11-24.