அமைதித் தீவு

அமைதித் தீவு (The Island of Peace) யோர்தான் நாட்டில் யோர்தான் ஆற்றங்கரையில் உள்ள ஒரு இடமாகும். இந்தப் பூங்காவானது யோர்தான் ஆறு மற்றும் யார்மெளக் ஆறு ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த இடத்திலிருந்து பின்காசு ரூட்டென்பெர்க்கின் நகராயிம் நீர் மின் சக்தி நிலையத்தைப் பார்க்க முடியும். 

1994 இஸ்ரேல்-ஜோர்டான் சமாதான உடன்படிக்கையானது யோர்தானிய இறையாண்மையின் கீழ் இந்தப் பகுதி இருப்பதை அங்கீகரித்தது. ஆனால், இஸ்ரேலிய நில உரிமையாளர்களின் நுழைவுக்கான சுதந்திரத்தை குத்தகைக்கு விட்டது.[2] 25 ஆண்டுக்கான, புதுப்பிக்கத்தக்க குத்தகையானது 2019 ஆம் ஆண்டில் முடிவிற்கு வருகிறது. யோர்தானிய அரசு இந்தக் குத்தகையை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான தனது விருப்பத்தை அறிவித்துள்ளது. அமைதி உடன்படிக்கையும் யோர்தான் இவ்வாறு செய்வதற்கான உரிமையை ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் வழங்கியுள்ளது. இவ்வாறான முடிவு குறித்த அறிவிப்பானது குத்தகை முடிவதற்கான காலத்திற்கு ஓராண்டு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். இந்த நிபந்தனைக்குத் தகுந்தவாறு யோர்தான் அக்டோபர் 2018 இல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.[3]

வரலாறு

தொகு

யோர்தான் ஆற்றின் வண்டல் படிவுகள் மற்றும் ஆற்றுப்படுகையின் நிலங்கள் இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டதற்கு முன்னதாக யூதர்களின் வசமாக இருந்தவையாகும்.[4]1927 ஆம் ஆண்டில், பாலஸ்தீன் மின்சார நிறுவனத்தின் நிறுவனரான பின்சாஸ் ரூட்டென்பெர்க் ஜோர்தானின் முதலாம் அப்துல்லாவுடன் ஒரு நீர் மின்சக்தி நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்காக கால்வாய்களும், அணைக்கட்டுகளும் இரண்டு நதிகளின் ஊடாகவும் கட்டப்பட்டன. இதன் விளைவாக, மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு தீவு படைக்கப்பட்டது. இந்த மின்சக்தி நிலையம் 1932 ஆம் ஆண்டில் மின்சாரத்தை வழங்கத் தொடங்கியது. 1948 ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேல் போரின் போது மின் உற்பத்தி இயக்கமானது நிறுத்தப்பட்டன.[5]

1994 ஆம் ஆண்டில், இஸ்ரேல்-ஜோர்தான் அமைதி உடன்படிக்கையின் அடிப்படையில் ஜோர்தானிடம் ஒப்படைத்தது. கிப்புட்ஸ் அஸ்டோட் யாகோவ் ஆகியோரிடமிருந்து இஸ்ரேல் விவசாயிகளிடம் நிலத்தைப் பண்படுத்துவதற்காக மீண்டும் குத்தகைக்கு விட ஜோர்தான் சம்மதித்தது. [1] பண்ணைத் தொழிலானது தானாக புதுப்பிக்கப்படக்கூடிய 25 ஆண்டு குத்தகையின் கீழ் நடைபெற்று வருகிறது. ஒரு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பூங்காவை பார்வையிடத் தங்கள் அடையாள அட்டையை ஜோர்தானியக் காவலர்களிடம் காண்பித்து விட்டுப் பார்வையிட வசதியாக எல்லைப்புறத்தில் கதவொன்று உள்ளது. இதற்காக அவர்கள் கடவுச்சீட்டோ, விசாவோ தேவையில்லை.[4] 2012 அன்றைய நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஒரு குழுவாகப் பார்வையிடும் போது அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டி ஒருவருடன் தான் அனுமதிக்கப்படுவர்.[6] சுற்றுலா ஆராய்ச்சியாளர்கள் ஆலன் கெல்ப்மேன் மற்றும் டார்யா மாவோஸ் ஆகியோர் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டிகள் கூறிய கதைகளை பகுப்பாய்வு செய்து வெளியீடென்று ஒன்று வெளியிட்டனர்.[6]

1997 படுகொலை

தொகு

1997 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் பெத்சாமேசில் உள்ள அமிட் ஃப்யூர்ஸ்ட் பள்ளியிலிருந்து கல்வி களப்பயணமாக வந்த இஸ்ரேலிய மாணவியர்களை ஜோர்தானைச் சார்ந்த படைவீரர் அகமது டாகாம்சே தனது துப்பாக்கியால் சுட்டதில் 13 அல்லது 14 வயதுடைய 7 மாணவியர்கள் இறந்தனர். மேலும் 6 மாணவியர்கள் படுகாயமடைந்தனர். ஜோர்தானின் அரசர் உசேன் பெத்சாமேசிற்கு நேரடியாக வந்து இறந்தவர்களுக்கான அஞ்சலியைச் செலுத்தியதோடு தனது நாட்டின் சார்பாக மன்னிப்பும் கோரினார். இந்த நடவடிக்கை இரு தரப்பிலும் நன்னம்பிக்கையையும், புரிந்துணர்வையும் அதிகரிக்க உதவும் என்ற விதத்தில் பார்க்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 The beautiful and tragic story of Naharayim, Jerusalem Post
  2. Israel-Jordan Peace Treaty Annex I
  3. Jordan to nix parts of peace treaty with Israel, reclaim territories, YNET, 21 October 2018
  4. 4.0 4.1 "Jordan River Valley Peace Park". Archived from the original on 2017-12-23. பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  5. "Jordan River Peace Park". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  6. 6.0 6.1 Alon Gelbman and Darya Maoz (2012). "Island of Peace or Island of War: Tourist Guiding". Annals of Tourism Research 39 (1): 108–133. https://archive.org/details/sim_annals-of-tourism-research_2012-01_39_1/page/108. 
  7. "With condolence visit to Israel, King Hussein spurs talks", CNN, March 16, 1997. Accessed July 22, 2007. "King Hussein of Jordan knelt in mourning Sunday with the families of seven Israeli schoolgirls gunned down last week by a Jordanian soldier, saying they were all 'members of one family.'"
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதித்_தீவு&oldid=3541341" இலிருந்து மீள்விக்கப்பட்டது