அமைதி, வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள்

அமைதி, வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் (World Science Day for Peace and Development) என்பது சமூகத்தில் அறிவியலின் முதன்மையான பாத்திரத்தை உரத்துசுட்டும் பன்னாட்டுக் கடைபிடிப்பு நாளாகும். இந்நாள் நவம்பர் மாதம் 10 ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் நடைமுறையில் எழும் அறிவியல் சிக்கல்களைப் பரந்துபட்ட மக்கள் மன்றத்துக்குக் கொண்டுசென்று விவாதங்களை முன்னெடுக்கும் நாளாகும். உலக அறிவியல் நாள் பன்னாட்டவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோவால்) 2001 ஆம் ஆண்டில் பறைசாற்றப்பட்டு, 2002 ஆம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.[1]

செயற்கைக் கோள் படிமம் காட்டும் உலகப் பசுமை வளாகம்
2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் எரிமலை வெடிப்பலைப் பரவலும் ஆழிப் பேரலையும்-கணினிப் படிமம்

உலக அறிவியல் நாள் அறிவியலைச் சமூகத்தோடு நெருக்கமாகப் பிணைத்து, அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிகளை மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்துதலை உறுதிப்டுத்தும் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. மேலும் நமது வாழிடமாகிய புவியுலகம் பற்றிய புரிதலினை விரிவாக்கும் அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பை உரத்த சுட்டிக் காட்டுகிறது; நமது சமூகத்தின் நீடுதிற வளர்ச்சிக்கு வழிசமைக்கிறது.[1][2]

அமைதி, வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளின் நோக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன-[3]

  • அமைதிக்கும் சமூகங்களின் நீடுதிற வளர்ச்சிக்குமான அறிவியலின் பாத்திரம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே செழுமைப்படுத்தல்;
  • உலக நாடுகளுக்கிடையான பகிர்தலைப் பற்றிய தன்னாட்டு, பன்னாட்டு ஒற்றுமையை மேம்படுத்தல்;
  • சமூகங்களின் நலனுக்காக அறிவியலைப் பயன்படுத்தலுக்கான தன்னாட்டு, பன்னாட்டுக் கடப்பாட்டைப் புதுப்பித்தல்;
  • அறிவியல் சந்திக்கும் அறைகூவல்கள் சந்திக்கவும் அறிவியல் செயல்பாட்டுக்கான ஆதரவை வளர்ப்பதற்கும் பொதுமக்களின் கவனத்தினை ஈர்த்தல்.

உலகெங்கிலும் உள்ள அரசு அலுவலர்கள், மாணவர்கள், ஊடகம், பள்லிச் சிறார்கள் உள்ளடக்கிய தனியர்களும் நிறுவனங்களும் உலக அறிவியல் நாளில் அறிவியல் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். அமைதி, வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் உலகெங்கிலும் உள்ள அறிவியல் நிகழ்ச்சிகளுக்காக பல பருண்மையான நிதிகளையும் திட்டங்களையும் நிகழ்ச்சிநிரல்களையும் உருவாக்கியுள்ளது. மேலும் முரண்பட்ட வட்டாரங்களின் அறிவியல் அறிஞர்களுக்கிடையே கூட்டுறவை மேம்படுத்த பெரிதும் உதவியுள்ளது. எடுத்துகாட்டாக, யுனெசுக்கோ ஆதரவல் உருவாக்கிய இசுரவேல் பாலத்தீன அறிவியல் நிறுவனத்தைக்(IPSO) கூறலாம்.[1]

வரலாறு தொகு

மக்களாட்சிச் செயல்பாடுகளை வெற்றிகரமாக்க, மக்களின் அன்றாட வாழ்வில் அறிவியல் தாக்கமும் அறவியல் உட்பட்ட ஆழ்ந்த சமூக உட்கிடைகள் மீதான அறிவியலின் கொடையும் முந்தேவைகளாக உள்ளன. யுனெசுக்கோவும் பன்னாட்டு அறிவியல் மன்றமும் 1999 ஆண்ட் ஜூலை மாதத்தில் அங்கேரி நாட்டின் புதாபெசுட்டுவில் ஒருங்கமைத்த உலக அறிவியல் கருத்தரங்கில் குழுமிய பல பங்கேற்பாளர்கள் அறிவியலின்பாலான மக்களின் விழிப்புணர்வை மேலும் பரவலாக்க தம் ஆதரவு குரலை எழுப்பினர். எத்தியோப்பியா, மலாவி நாடுகளின் பேராளர்களும் அறிவியல் மேம்பாட்டுக்கான பிரித்தானியக் கழகமும் உலக அறிவியல் நாள் அல்லது உலக அறிவியல் வாரத்தை உருவாக்க முன்மொழிந்தனர். [4]

பிறகு, உலக அறிவியல் கருத்தரங்கப் பேராளர்கள் அறிவியல் நிகழ்ச்சிநிரல் – செயல்பாட்டுக்கான சட்டகம், எனும் ஒரு செயல்திட்டத்தை ஏற்றனர். அகன்ற தள அறிவியல் கல்வி, பண்பாட்டை மேம்படுத்தலுக்கான பன்னாட்டுத் திட்டத்தை உருவாக்க அடிகோலிட்டனர். ஆண்டுக்கு இருமுறை கூடும் யுனெசுக்கோவின் செயற்குழுமம் இப்பணிக்குப் பொறுப்பேற்றது. இக்குழு தனது 160 ஆவது அமர்வில் (1999 அக்தோபர், பாரீசு) அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் நாள் பற்றிய இயலுமை ஆய்வை மேற்கொள்ள முடிவெடுத்தது.[4][5]

இந்த இயலுமை ஆய்வு இதில் பங்குபற்றுவோரின் அகல்விரிவான அறிவுரையைப் பெற்று அதன்படி அமைந்த அறிவியல் நாள் செயல்திட்டம் 2000 ஆம் ஆண்டு அக்தோபரில் நடந்த அதன் 162 ஆம் அமர்வில் யுனெசுக்கோ செயற்குழுமத்தின் ஒப்புதலைப் பெற்றது. இதன்பிறகு 2001 ஆம் ஆண்டு அக்தோபரில் பாரீசில் நடந்த யுனெசுக்கோ பொதுக் கருத்தரங்கின் 31 ஆம் அமர்வில் அதன் மேலொப்புதலையும் பெற்றது.[6]இந்தப் பொதுக் கருத்தரங்கு யுனெசுக்கோவின் அனைத்து உறுப்பு நாடுகளையும் ஈராண்டுக்கு ஒருமுறை கூட்டி ஒவ்வொரு திட்ட்த்தையும் அதற்கு வேண்டிய அடுத்த இரண்டாண்டுகட்கான பாதீட்டையும் ஏற்று வழங்குகிறது. இந்தப் பொது கருத்தரங்கு அமைதி, வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளை ஒவ்வோராண்டும் நவம்பர் 10 ஆம் நாளன்று கடைபிடிக்க முடிவெடுத்தது.[7] இந்நிகழ்ச்சியை உறுப்பு நாடுகளும் அரசுசார், அரசுசாரா நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் கல்விச் சமூகங்களும் தொழில்முறைக் கழகங்களும் பள்ளிகளும் கல்லூரிகளும் முனைப்பான பங்கேற்றுக் கொண்டாட ஊக்குவித்தது. 2002 நவம்பர் மாத முதலாம் அமைதி வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் கொண்டாட ஆயத்தப்படுத்தலில் பங்கேற்க உலக அறிவியல் கருத்தரங்கை முன்னெடுக்கும் அனைத்துப் பங்கேற்பாளர்களும் அழைக்கப்பட்டனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 {{cite web|url=https://en.unesco.org/commemorations/worldscienceday |title=World Science Day for Peace and Development |publisher=UNESCO |access-date= 23 November 2020 } }
  2. "World Science Day for Peace and Development celebrates right to science". International Science Council. 9 November 2018. பார்க்கப்பட்ட நாள் 23 November 2020.
  3. "World Science Day for Peace and Development, 10 November". UN. 2020. பார்க்கப்பட்ட நாள் 23 November 2020.
  4. 4.0 4.1 4.2 Harnessing Science to Society: Analytical Report to Governments and International Partners on Follow-up to the World Conference on Science. Paris: UNESCO. 2002. http://webarchive.unesco.org/20151229154213/http://www.unesco.org/science/wcs/report_wcs.pdf. 
  5. "Science Agenda - Framework for Action". UNESCO. 1999.
  6. "World Science Day for Peace and Development 2020". IISD. 2020. பார்க்கப்பட்ட நாள் 23 November 2020.
  7. "World Science Day For Peace And Development 2020: Inspirational Quotes By Famous Scientists". IBTimes. 10 November 2020. பார்க்கப்பட்ட நாள் 23 November 2020.

வெளி இணைப்புகள் = தொகு