அமைப்புச் செயற்பாட்டியம்

சமூகவியலிலும் மானிடவியலிலும் அமைப்புச் செயற்பாட்டியம் (Structural functionalism) அல்லது வெறுமனே செயற்பாட்டியம் என்பது, ஒன்றாகச் செயற்பட்டு ஒருமைப்பாட்டையும், உறுதிப்பாட்டையும் மேம்படுத்துகின்ற கூறுகளைக் கொண்ட, ஒரு சிக்கலான முறைமையாகப் பார்த்துக் கோட்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.[1] இந்த அணுகுமுறை பேரியல் மட்டத்தில் சமூகத்தைப் பார்க்கிறது. இது, சமூகம் முழுமையையும் உருவாக்கும் சமூகக் கட்டமைப்புக்களை விரிந்த நோக்கில் பார்ப்பதுடன்,[2] சமூகம் உயிரினங்களைப்போல் கூர்ப்பு அடைகிறது எனவும் நம்புகிறது.[3] சமூகக் கட்டமைப்பு, சமூகச் செயற்பாடு என்னும் இரண்டையுமே இந்த அணுகுமுறை கவனத்தில் கொள்கிறது. சமூகத்தின் ஆக்கக் கூறுகளான நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை செயற்பாட்டியம் முழுதாகக் கவனத்திற் கொள்கிறது. "உறுப்பு"க்கள் முழுமையான உடலின் முறையான செயற்பாட்டுக்காக வேலை செய்வதுபோல், சமூகத்தின் கூறுகளும் வேலை செய்கின்றன என்னும் பொதுவான ஒப்புமையை ஏபர்ட் இசுப்பென்சர் என்பவர் பிரபலப்படுத்தினார்.[4] மிகவும் எளிமையான சொற்களில் சொல்வதானால், உறுதியானவையும், ஒருங்கிணைந்தவையுமான முறைமைகளின் செயற்பாட்டுக்கான காரணமாக, வழமை அல்லது நடைமுறை சார்ந்த அம்சங்கள் கொண்டுள்ள தாக்கங்களைக், கடுமையாக எடுத்துக்காட்டும் முயற்சிகளுக்கு, அமைப்புச் செயற்பாட்டியம் அழுத்தம் கொடுக்கிறது. தல்காட் பார்சன்சு என்பவரின் கருத்துப்படி, அமைப்புச் செயற்பாட்டியம், ஒரு குறிப்பிட்ட சிந்தனைக் குழு என்பதிலும், அது சமூக அறிவியலின் முறையியல் வளர்ச்சியில் ஒரு படிநிலையை விளக்குகிறது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. ^ Macionis, Gerber, Sociology 7th Canadian Ed. (Pearson Canada Inc., 2010), pg. 14
  2. Macionis, Gerber, Sociology 7th Canadian Ed. (Pearson Canada Inc., 2010)pg.19
  3. ^DeRosso, Deb The Structural Functional Theoretical Approach, [1] 2003.(Accessed February 24, 2012)
  4. Urry, John (2000). "Metaphors". Sociology beyond societies: mobilities for the twenty-first century. Routledge. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-19089-3.
  5. Talcott Parsons, "The Present Status of "Structural-Functional" Theory in Sociology." In Talcott Parsons, Social Systems and The Evolution of Action Theory New York: The Free Press, 1975.
  6. Bourricaud, F. 'The Sociology of Talcott Parsons' Chicago University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-06756-4. p. 94