அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது இந்திய மாநிலமான, தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) ஆகும்.

இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது.[1]

  1. விவசாயத் தொழிலாளர் நலவாரியம்
  2. மீனவர் நலவாரியம்
  3. கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம்
  4. சீர்மரபினர் நலவாரியம்
  5. ஆட்டோ ரிக்சா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நலவாரியம்
  6. பனைமரத் தொழிலாளர் நலவாரியம்
  7. காலணித் தொழிலாளர் நலவாரியம்
  8. ஊனமுற்றோர் நலவாரியம்
  9. திருநங்கைகள் நலவாரியம்
  10. முடி திருத்துவோர் நலவாரியம்
  11. தையல் தொழிலாளர் நலவாரியம்
  12. ஓவியர் நலவாரியம்
  13. கைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் நலவாரியம்
  14. தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம்
  15. நரிக்குறவர் நலவாரியம்
  16. உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்
  17. கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியம்
  18. நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்
  19. அருந்ததியர் நலவாரியம்
  20. கட்டட தொழிலாளர்கள் நலவாரியம்
  21. புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நலவாரியம்
  22. அச்சக தொழிலாளர் நலவாரியம்
  23. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலவாரியம்
  24. தமிழ்நாடு வணிகர்கள் நலவாரியம்
  25. தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நலவாரியம்
  26. தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம்
  27. திரைத் தொழிலாளர் நலவாரியம்
  28. மண்பாண்டம் தொழிலாளர் நலவாரியம்

மேற்கோள்கள்

தொகு