அமோனியா நீரூற்று
அமோனியா நீரூற்று (Ammonia fountain) என்பது ஒரு வகையான வேதியியல் செயல்விளக்கச் சோதனையாகும்[1]. இச்சோதனையில், அமோனியா வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு குடுவைக்குள் நுழைவாய் ஒன்றின் உதவியால் தண்ணீரைச் செலுத்தும் செயல் நிகழ்கிறது. அமோனியா வாயு நீரில் கரைவதால் குடுவைக்குள் அழுத்தக் குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக அடுத்த கலனில் இருந்து அதிக அளவு தண்ணீர் குடுவைக்குள் பாய்ந்து நீருற்று விளைவை உண்டாக்குகிறது. இச்செயல்விளக்கம் கரைதல் மற்றும் வாயு விதிகளை அறிமுகப்படுத்தி விளக்கப் பயன்படுகிறது.
ஒப்பீட்டளவில் அமோனியாவுக்கு சமமான கரைதிறன் கொண்ட ஐதரசன் குளோரைடு போன்ற வாயுவையும் அமோனியாவுக்குப் பதிலாக இச்செயல் விளக்கச் சோதனையில் பயன்படுத்தலாம்[2].
அமோனியாவுக்குப் பதிலாக நீராவியைப் பயன்படுத்தினால் அறை வெப்பநிலையில் இருக்கும் ஆவி அழுத்தத்தைவிட அதிகமான அழுத்த நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே அதே நீரூற்று விளைவைக் காணவியலும். இங்கு குடுவையில் ஏற்படும் அழுத்தக் குறைவு குடுவை அறை வெப்பநிலைக்குத் திரும்புவதால் ஆவிசுருங்குதலும் நிகழ்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Ammonia Smoke Fountain: An Interesting Thermodynamic Adventure M. Dale Alexander , Daniel T. Haworth J. Chem. Educ., 1999, 76 (2), p 210 எஆசு:10.1021/ed076p210 10.1021/ed076p210
- ↑ L.A. Ford, Chemical Magic, 2nd ed., Dover, 1993.