ஆறாவது மன்வந்தரத்தின் முடிவில் திராவிட மன்னரும் முனிவருமான ஸத்யவிரதன் என்பவர் நாராயணரின் மீன் வடிவ அவதாரத்தால் (மத்ஸ்யாவதாரம்) ஆத்மஞானம் உபதேசிக்கப்பட்டு அடுத்த வைவஸ்வத மன்வந்தரத்திற்கு மனுவாக நியமிக்கப்பட்டார். இந்த வைவஸ்வத மனுவின் பத்தாவது புத்திரனான நபாகனுக்குப் பிறந்த மகனே அம்பரீஷன். அம்பரீஷன் ஏழுகடல் சூழ்ந்த பூமிக்கு அரசனாக இருந்தார். சிறந்த நாராயண பக்தர்.

துர்வாசர் இவர் மீது கோபம் கொண்டு தம் தலைமுடியிலிருந்து அசுரனை உருவாக்கி தாக்க அனுப்பியபோது இவரைக் காக்க நாரயணரது சுதர்சன சக்கரம் துர்வாச முனிவரைத் துரத்தியது. அதிலிருந்து தப்பிக்க துர்வாச முனிவர் அம்பரீச மன்னரையே சரணடைந்தார்.

"நாராயணீயம் முப்பத்திரண்டாவது தசகம் - மத்ஸ்யாவதாரம்" ஸத்யவிரதரின் வரலாறையும், "நாராயணீயம் முப்பத்து மூன்றாவது தசகம் - அம்பரீஷ சரிதம்" அம்பரீஷ மன்னரின் வரலாற்றையும் கூறுகிறது.[1]

உதவி நூல் தொகு

  1. ஸ்ரீமந்நாராயணீயம்;ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 166, 176

மேற்கோள்கள் தொகு

அம்பரீசன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பரீசன்&oldid=3832520" இலிருந்து மீள்விக்கப்பட்டது