அம்பலவன் பழுவூர்நக்கன்

சோழ பேரரசின் அரசு அலுவலர்

அம்பலவன் பழுவூர்நக்கன் எனபவர் உத்தம சோழன், இராஜராஜ சோழன் போன்றோர் காலத்தில் சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவர் ஆவார். இவர் அக்காலத்தின் கங்க நாட்டின் குவாளயபுரம் என்று அழைக்கப்பட்ட தற்காலத்திய கோலாரைச் சேர்ந்த வேளாளர் என அறியப்படுகிறது. இவருக்கு விக்கிரமசோழமாராயன், ராசராசப்பல்லவரையன் என்ற பட்டங்கள் இருந்ததாக அறியப்படுகிறது.

குடும்பம்

தொகு

அம்பலவன் பழுவூர்நக்கனுக்கு அபராஜிதன் செய்யவாய்மணி, சிங்கபன்மன் காஞ்சி அக்கன் என இரு மனைவியர் இருந்தனர்.

திருப்பணிகள்

தொகு

இவர் பல்வேறு அறக் கொடைகளை செய்துள்ளதாக கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்றார். அம்பலவன் பழுவூர்நக்கன் விசயமங்கைத் திருக்கோயிலைக் கல்லால் கட்டுவித்ததோடு, ஸ்ரீவிமானத்தையும் கல்லால் கட்டுவித்து, இக்கோயிலில் - நான்கு வேளையும் திருவமுது படைக்கவும் இதர செலவுகளுக்கும் நெடுவாயில் என்ற ஊரையும் தானமாக அளித்துள்ளார். இவரது இரு மனைவிகளும் விசய மங்கைக் கோயிலில் விளக்கு எரிக்க ஆடுகளை தானமாக அளித்துள்ளனர். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 14-20, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, அம்பலவன் பழுவூர் நக்கன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலவன்_பழுவூர்நக்கன்&oldid=3716690" இலிருந்து மீள்விக்கப்பட்டது