அம்பாத்துறை பாளையம்

அம்பாத்துறை கி.பி. 1600 இல் விசுவநாத நாயக்கரால் நிறுவப்பட்ட 72 பாளையங்களில் ஒன்று. பாளையம் மற்றும் ஜமீன் நிர்வாகத்தை செய்தவர்கள் கம்பளத்து நாயக்கர் என்று சொல்லும் நாயக்கர் இனத்து மக்கள்., ஜமின் காலத்தில் இங்கு கட்டப்பட்ட அரண்மனை இன்றும் உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில், காட்டு மாரியம்மன் கோவில் போன்றவற்றை இவர்களே கட்டி உள்ளனர். விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆங்கிலேயருக்கு எதிராக பாளையக்காரர்களைக் கொண்டு ஏற்படுத்திய கூட்டமைப்பில் இப்பாளையத்தி பாளையகாரர்களும் பங்கேற்றனர். இவர்கள் மதுரை நாயக்க மன்னர்களிடம் நெருக்கமானவர்களாக இருந்து வந்துள்ளனர் .[1]

மேற்கோள்கள் தொகு

<references>

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
  1. http://princelystatesofindia.com/Glossary/t_w.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாத்துறை_பாளையம்&oldid=3590263" இலிருந்து மீள்விக்கப்பட்டது