அம்பேத்கரின் இருபத்திரண்டு உறுதிமொழிகள்
பௌத்த மதத்துக்கு மாறிய பின்பு, அம்பேத்கர் 22 உறுதிமொழிகளை ஏற்றதோடு, தமது ஆதரவாளர்களையும் அவ்வுறுதிமொழிகளை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.[1] திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு, அம்பேத்கர் தம்மைப் பின்பற்றியோருக்கு தம்ம தீட்சா வழங்கினார். இந்நிகழ்வில் மும்மணிகள் மற்றும் ஐந்து நல்லொழுக்கங்கள் வழங்கப்பட்டபின் 22 உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டன. 14 அக்டோபர் 1956 அன்று நாக்பூரின் சந்திரபூரில், அம்பேத்கர் மற்றொரு பாரிய பொது மத மாற்ற விழாவை நடத்தினார்.[2][3]
இவ்வுறுதிமொழிகள் நவயான பௌத்தத்தின் சமூகச் சீர்திருத்தக் கூறுகளையும், பௌத்த மதத்தின் முற்காலப் பிரிவுகளிலிருந்தான நவயான பௌத்தத்தின் அடிப்படை விலகலையும் பிரதிபலித்து நிற்கின்றன.
உறுதிமொழிகள்
தொகுஓம்வேத் முதற் பதிப்பு
தொகு
- பிரம்மா, விசுணு மற்றும் மகேசுவரன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
- கடவுளின் மறுபிறப்பாக நம்பப்படுகின்ற, ராமன் மற்றும் கிருசுணன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
- கௌரி, கணபதி மற்றும் இந்துக்களின் ஏனைய ஆண் மற்றும் பெண் கடவுளர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
- கடவுளின் மறுபிறப்பில் நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன்.
- புத்தர் விசுணுவின் மறுபிறப்பு என நான் நம்பவோ கருதவோ மாட்டேன். இது ஒரு அடிமுட்டாள்த்தனம் என்றும் பொய்ப் பரப்புரை எனவும் நான் நம்புகிறேன்.
- நான் சிரார்த்தமளிக்கவோ, பிண்டமளிக்கவோ மாட்டேன்.
- நான் புத்தரின் கொள்கைகள் மற்றும் போதனைகளை மீறும் வகையில் நடக்க மாட்டேன்.
- பிராமணர்களால் ஆற்றப்படும் எந்த நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்.
- நான் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என நம்புகிறேன்.
- நான் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குப் பெருமுயற்சி எடுப்பேன்.
- நான் புத்தரின் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றுவேன்.
- நான் புத்தரால் முன்மொழியப்பட்ட பத்துப் பாரமிதாக்களைப் பின்பற்றுவேன்.
- நான் அனைத்து உயிர்களிடமும் இரக்கமும் அன்பும் செலுத்துவதோடு அவற்றைப் பாதுகாப்பேன்.
- நான் திருட மாட்டேன்.
- நான் பொய்யுரைக்க மாட்டேன்.
- உடலின்பத்தினால் தூண்டப்பட்ட பாவங்களைச் செய்ய மாட்டேன்.
- மது, போதைப்பொருள் போன்ற மதிமயக்கும் பொருட்களை உட்கொள்ள மாட்டேன்.
- (மேற் குறிப்பிட்ட ஐந்து தடுக்கும் விதமான உறுதிமொழிகளும் [#13–17] பஞ்ச சீலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)
- நான் நாளாந்த வாழ்வில் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றவும், இரக்கம் மற்றும் அன்பைப் பொழிவதற்கும் பெருமுயற்சி எடுப்பேன்.
- சமத்துவமின்மையை ஊக்குவிப்பதன் மூலம் மனித இனத்துக்கு எதிராகவும், மனித இனத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டையாகவும் உள்ள இந்து மதத்தை நான் துறக்கிறேன். பௌத்த மதத்தை எனது மதமாக ஏற்றுக்கொள்கிறேன்.
- நான் புத்தரின் தம்மமே உண்மையான ஒரே மதம் என உறுதியாக நம்புகிறேன்.
- நான் ஒரு புதிய பிறவி எடுத்துள்ளதாகக் கருதுகிறேன். (வேறுவிதமாக, "நான் பௌத்தத்தை ஏற்பதன் மூலமாக மீளப் பிறவி எடுத்துள்ளதாக நம்புகிறேன்."[4]:{{{3}}})
- நான் இதன் பின்னர் எனது வாழ்வை புத்தரின் தம்மத்தின் போதனைகளின் வழியே முன்னெடுப்பேன் என உளத்தூய்மையுடன் உறுதியளித்து வெளிப்படுத்துகிறேன்.
— (Omvedt 2003, ப. 261–262)
ஓம்வேத் இரண்டாம் பதிப்பு
தொகு
- பிரம்மா, விசுணு மற்றும் மகேசுவரன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
- கடவுளின் மறுபிறப்பாக நம்பப்படுகின்ற, ராமன் மற்றும் கிருசுணன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
- கௌரி, கணபதி மற்றும் இந்துக்களின் ஏனைய ஆண் மற்றும் பெண் கடவுளர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
- கடவுளின் மறுபிறப்பில் நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன்.
- புத்தர் விசுணுவின் மறுபிறப்பு என நான் நம்பவோ கருதவோ மாட்டேன். இது ஒரு அடிமுட்டாள்த்தனம் என்றும் பொய்ப் பரப்புரை எனவும் நான் நம்புகிறேன்.
- நான் சிரார்த்தமளிக்கவோ, பிண்டமளிக்கவோ மாட்டேன்.
- நான் புத்தரின் கொள்கைகள் மற்றும் போதனைகளை மீறும் வகையில் நடக்க மாட்டேன்.
- பிராமணர்களால் ஆற்றப்படும் எந்த நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்.
- நான் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என நம்புகிறேன்.
- நான் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குப் பெருமுயற்சி எடுப்பேன்.
- நான் புத்தரின் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றுவேன்.
- நான் புத்தரால் முன்மொழியப்பட்ட பத்துப் பாரமிதாக்களைப் பின்பற்றுவேன்.
- நான் அனைத்து உயிர்களிடமும் இரக்கமும் அன்பும் செலுத்துவதோடு அவற்றைப் பாதுகாப்பேன்.
- நான் திருட மாட்டேன்.
- நான் பொய்யுரைக்க மாட்டேன்.
- உடலின்பத்தினால் தூண்டப்பட்ட பாவங்களைச் செய்ய மாட்டேன்.
- மது, போதைப்பொருள் போன்ற மதிமயக்கும் பொருட்களை உட்கொள்ள மாட்டேன்.
(மேற் குறிப்பிட்ட ஐந்து தடுக்கும் விதமான உறுதிமொழிகளும் [#13–17] பஞ்ச சீலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)- நான் நாளாந்த வாழ்வில் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றவும், இரக்கம் மற்றும் அன்பைப் பொழிவதற்கும் பெருமுயற்சி எடுப்பேன்.
- சமத்துவமின்மையை ஊக்குவிப்பதன் மூலம் மனித இனத்துக்கு எதிராகவும், மனித இனத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டையாகவும் உள்ள இந்து மதத்தை நான் துறக்கிறேன். பௌத்த மதத்தை எனது மதமாக ஏற்றுக்கொள்கிறேன்.
- நான் புத்தரின் தம்மமே உண்மையான ஒரே மதம் என உறுதியாக நம்புகிறேன்.
- நான் ஒரு புதிய பிறவி எடுத்துள்ளதாகக் கருதுகிறேன்.
(வேறுவிதமாக, "நான் பௌத்தத்தை ஏற்பதன் மூலமாக மீளப் பிறவி எடுத்துள்ளதாக நம்புகிறேன்."[4])- நான் இதன் பின்னர் எனது வாழ்வை புத்தரின் தம்மத்தின் போதனைகளின் வழியே முன்னெடுப்பேன் என உளத்தூய்மையுடன் உறுதியளித்து வெளிப்படுத்துகிறேன்.
— (Omvedt 2003, ப. 261–262)
மேற்கோள்கள்
தொகு- ↑ Omvedt 2003, ப. 261–262.
- ↑ Vajpeyi, Ananya (27 August 2015). "Comment article from Ananya Vajpeyi: Owning Ambedkar sans his views". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
- ↑ "Nagpur is where Dr BR Ambedkar accepted Buddhism on October 14, 1956, along with several followers". dna. 8 October 2015. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
- ↑ 4.0 4.1 "22 Vows". Jai Bheem (jaibheem.com). India.
மூலங்கள்
தொகு- Omvedt, Gail (2003). Buddhism in India: Challenging Brahmanism and caste. Thousand Oaks, CA: Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761996648 – via archive.org.