அம்பைட்டு
சங்கிலி சிலிக்கேட்டு வகை
அம்பைட்டு (Umbite) என்பது (K2(Zr,Ti)Si3O9•H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சிர்க்கோனோசிலிக்கேட்டு வகைக் கணிமமான இது வடக்கு உருசியாவில் கிடைக்கிறது. இலேக் அம்போசெரோ என்பவர் கண்டறிந்த காரணத்தால் இக்கனிமத்திற்கு அம்பைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. உருசியாவின் உவுவோனெமியோக் ஆற்றுச்சமவெளி, கைபினை மலைகள், கோலா தீபகற்பம், வடக்குப்பகுதி மூர்மேன்சுகயா ஓப்லாசுட்டு போன்ற பகுதிகளில் இக்கனிமத்தின் அமைவிடங்கள் உள்ளன[2][3]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Umb என்ற குறியீட்டால் அம்பைட்டு கனிமத்தைக் குறிப்பிடுகிறது.[4]
அம்பைட்டு Umbite | |
---|---|
அரிய சிர்கோனியம் கனிமம் அம்பைட்டின் இளஞ்சிவப்பு வெள்ளை படிகங்கள் அம்பை ஏரியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. | |
பொதுவானாவை | |
வகை | சங்கிலி சிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | K2ZrSi3O9•H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, இள மஞ்சள் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மிளிர்வு | கண்ணாடித்தன்மை |
மேற்கோள்கள் | [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mindat
- ↑ Webmineral.com - Umbite
- ↑ "Handbook of Mineralogy (HOM - MSA) - Umbite" (PDF). Archived from the original (PDF) on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2018-11-20.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.